வாஸ்குலார் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்

Vascular Health

வாஸ்குலார் அமைப்பு என்றால் என்ன?

வாஸ்குலார் அமைப்பு என்பது இரத்தம் மற்றும் ஆக்சிஜனை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய இரத்த நாளங்களின் வலையமைப்பை குறிக்கிறது. மூன்று வெவ்வேறு வகையான இரத்த நாளங்கள் உள்ளன – அவை தமனிகள்(Arteries), சிரைகள்(VEINS), மற்றும் தந்துகிகள் (CAPILLARIES).

வாஸ்குலார் நோயை தவிர்க்கும் பொருட்டு, இந்த வலையமைப்பை பாதுகாப்பதும் மற்றும் சுமூகமான ரீதியில் இயக்க செய்வதும் அவசியமாகும். இரத்த ஓட்டத்தில் ஏற்படக்கூடிய எந்தவிதமான தடையும், இதயம், கைகள், கால்கள், நுரையீரல், மற்றும் மூளை போன்ற முக்கிய உடல் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடும்.

வாஸ்குலார் நோயின் தாக்கம் யாது?

பல்வேறு காரணங்களினால், தமனிகளில் ரத்தக் கட்டுகள் உருவாகக்கூடும். இது தமனிகளை குறுகியதாக்கி, உடலின் பல்வேறு பாகங்களுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை தடை செய்கிறது. இதுவே ஒரு வாஸ்குலார் நோயின் முதன்மைக் காரணமாகும்.

ரத்த ஓட்டம் குறைவதால் இரத்த நாளங்களை இறுகச் செய்கிறது. மேலும் இந்நிலை மாரடைப்பு, உறுப்பை துண்டித்தல் மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர உடல்நிலை கோளாறுகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.

வாஸ்குலார் நோய்கள் பல வடிவங்களை எடுக்கக்கூடும். மிகப் பொதுவான  கோளாறுகளாக இருப்பவை கரோனரி தமனி நோய் (coronary artery disease) மற்றும் புற தமனி நோய் (peripheral artery disease) ஆகும். கரோனரி தமனி நோய் (coronary artery disease) என்பதில் இதயத்திற்கு இரத்தத்தை வழங்கக்கூடிய பொறுப்பில் இருக்கும் இரத்தநாளங்களில் பிளேக் உருவாகிடும் நிலையாகும். புற தமனி நோய் (peripheral artery disease) என்பதில் கால்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய தமனிகளில் பிளேக் உருவாக்கம் இருக்கும் நிலையாகும்.

உலகளவில், இறப்பிற்கு வழிவகுக்கக் கூடியதாக PAD மற்றும் CAD போன்ற கார்டியோ வாஸ்குலார் நோய்கள் இருந்தபோதிலும், வாஸ்குலார் ஆரோக்கியமானது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலும், புறக்கணிக்கப்படும் பெரும்பாலும் கண்டறியப்படாமலும் சிகிச்சை அளிக்கப்படாமலுமே உள்ளது.

எனவே, வாஸ்குலார் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளையும், அதன் அபாய காரணிகளையும் புரிந்து கொள்வது அவசியமாகும். இது சரியான நேரத்தில் நோயறிதலுக்கும் மற்றும் திறமையான சிகிச்சைக்கும் உதவுவதோடு மட்டுமல்லாமல், நோயாளியின் ஆரம்பகால நிலை மீட்புக்கும், அதே நேரத்தில் வேறு எந்த பெரிய சுகாதார சிக்கல்களையும் தடுக்க வழிவகுக்கும்.

புரிந்துகொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவெனில், வழக்கமான தடுப்பு நடவடிக்கைகளுடன் இருந்தபோதிலும் பிளேக் ஆனது இரத்த நாளங்களில் உருவாகக்கூடும். எனவே, ஒரு நோயாளியானவர் தனது வாஸ்குலார் ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனித்து, நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும்.

வாஸ்குலார் நோயின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?

வாஸ்குலார் நோய்கள் மரபணு ரீதியாக அல்லது மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவே ஏற்படுவதாக அறியப்படுகிறது. சிரை கோளாறுகள் கொண்ட குடும்ப வரலாற்றுடன் இருக்கக்கூடிய நோயாளிக்கு வாஸ்குலார் நோய் ஏற்படுவதற்கான தாகத்தை குறைக்க நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற போதிலும், நமது வாழ்க்கை முறையை சரிசெய்து கொள்ளவும் மற்றும் வாஸ்குலார் நோய் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த வாய்ப்பை குறைக்கவும் நம்மால் பல்வேறு சிறிய விஷயங்களை மேற்கொள்ள முடியும்.

முதன்மைப் பணியாக, நீங்கள் சத்துள்ள உணவை சாப்பிடுவதிலும் மற்றும் அன்றாடம் சில வடிவிலான உடற்பயிற்சியை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். சீரான உணவை உட்கொள்வதும் மற்றும் தினசரி பழக்கமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதும், உடலில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இது அனைத்து வயதினரிலும் வாஸ்குலார் கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது.

மறுபுறம், புகைபிடித்தலும் அதிக அளவிலான மதுவை உட்கொள்வதும் உங்களது வாஸ்குலார் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. நீங்கள் உங்களது வாஸ்குலார் அமைப்பை கவனித்து, அதனை நன்முறையில் பணியாற்ற செய்திட, நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும், எந்தவிதமான மன அழுத்தத்தையும் தவிர்த்து, போதுமான தூக்கத்தை பெற வேண்டும்.

வாஸ்குலார் நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்கு (எந்தவிதமான வலி அல்லது அசௌகரியம் போன்ற அறிகுறிகளை கொண்டில்லாதவர்கள்) வாஸ்குலார் நோய் இருப்பதை கண்டறிவது சிரமமான ஒன்றாகும். கால்களில் ஏதேனும் வலி அல்லது வீக்கம் இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட பகுதியின் உடல் பரிசோதனையிலிருந்து மருத்துவர் நோயறிதலை தொடங்குவார்.

வாஸ்குலார் நோயின் மரபணு ரீதியான காரணத்தை சரிபார்க்க வேண்டி, உங்களது குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை குறித்து மருத்துவர் உங்களிடம் கேள்விகளை கேட்டறிவார். மேலும் அவர் / அவள், நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும் மற்றும் சேதமடைந்த இரத்தநாளங்கள் இருப்பதை சரிபார்க்க அவர் / அவள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனை மேற்கொள்ளவும் உங்களை கேட்டுக்கொள்ளக்கூடும்.

வாஸ்குலார் நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

சிரை நோய்க்கான சிகிச்சையானது நோயாளியின் தற்போதைய உடல் நிலையின் அடிப்படையிலேயே அமைகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் பொதுவாக மருந்துகளுடன் வாழ்க்கை முறையில் மாற்றங்களை பரிந்துரைப்பர். சில நோயாளிகளுக்கு சுருக்கு காலுறைகள் பயன்படுத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்படும். எனினும், சில தீவிரமான நிலைகளில், வாஸ்குலர் அறுவை சிகிச்சையானது முற்றிலும் அவசியமானதாக இருக்கக்கூடும்.

இப்போதெல்லாம், வலியற்ற மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட செயல்முறைகளின் வாயிலாக சேதமடைந்த இரத்த நாளங்களை அறுவை சிகிச்சை-இல்லாத நிலையிலேயே நீக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த செயல்முறையில், சேதமடைந்த இரத்தநாளங்கள் அகற்றப்பட்டு, உடலால் அவை மீண்டும் உறிஞ்சப்பட்ட பிறகு, உடலானது தானாகவே இரத்தத்தை அருகாமையில் உள்ள ஆரோக்கியமான இரத்த நாளங்களுக்கு மீண்டும் செலுத்துகிறது.

இந்த செயல்முறையானது கால்களில் அளிக்கப்படும் மயக்க மருந்தின்( LOCAL ANAESTHESIA) தாக்கத்தின்கீழ், ஒரு தலையீட்டு கதிரியக்கவியலாளரால் (Interventional Radiologist) செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு சுருக்கமான நடைமுறையாகும், மேலும் நோயாளியானவர் அதே நாளில் வீடு திரும்பலாம். இதற்கு எந்தவிதமான வெட்டுகளோ அல்லது தையல்களோ தேவையில்லை, மேலும் இது எந்தவிதமான தழும்புகளையும் ஏற்படுத்தாது . நோயாளிகள் அதே நாளில் வீடு திரும்பலாம்.

வாஸ்குலார் நோய்க்கான உங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள எண்ணுகிறீர்கள் எனில், ஏவிஸ் வாஸ்குலர் மையத்தில் சிறந்த தலையீட்டு கதிரியக்கவியலாளர் மற்றும் அனுபவமிக்க வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணரான, டாக்டர். ராஜா வி கொப்பல்லா அவர்களின் ஆலோசனை பெறுங்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவம் கொண்ட இவர், 13000+ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

ஏவிஸ் வாஸ்குலார் மையத்தில் மிகவும் மலிவான விலையில், தரம் வாய்ந்த சிகிச்சைக்கான உங்களது கலந்தாலோசனை திட்டமிடுங்கள். உள்ளூர்-அல்லாத நோயாளிகளுக்கு நாங்கள் பிரத்தியேக ஏற்பாடுகளை கொண்டிருக்கிறோம், மேலும் மெடிக்கிளைம் தீர்வுகளுக்கான விரைவான நட்பு ரீதியான ஆதரவையும் வழங்குகிறோம். இன்றே உங்களது ஆலோசனைக்கு பதிவு செய்திடுங்கள்!