Book Appointment
X

Choose location for Appointment


கர்ப்பம் மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) – இரண்டிற்கும் தொடர்புள்ளதா?

Deep vein thrombosis

கர்ப்பகாலம் என்பது உற்சாகமான தருணமாகும். எனினும், எதிர்பார்ப்புடைய ஒரு தாய்க்கு இது கொண்டு வரும் இடர்கள் மற்றும் சவால்கள் பல. இரத்தக் கட்டிகள், அபாய காரணிகள் குறித்தும் மற்றும் கர்ப்பத்தின் போதும் மற்றும் குழந்தை பிறப்பிற்குப் பிறகும், உங்களையும் உங்கள் குழந்தையையும் இவற்றிலிருந்து தடுப்பதற்கான குறிப்புகளையும் கற்றுக்கொள்ளுங்கள். 

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இரத்தக் கட்டிகள் ஏற்படுவதற்கான அதிக அபாயம் இருப்பது ஏன்?

இரத்தக் கட்டிகள்கள் இருப்பது, நரம்புகளின் மூலம் செயல்படும் இயல்பான இரத்த ஓட்டத்தை தடுத்து, கால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமயங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து, பளபளப்பாக தோற்றமளிக்கிறது. இந்த அறிகுறிகள் லேசாக இருப்பதனால் கருவுற்றிருக்கும் பெண்மணிக்கு இது இயல்பானதாக தோன்றலாம்.

ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) என்பது ஆழமான நரம்புகளில், பெரும்பாலும் கால்கள், கணுக்கால் அல்லது இடுப்பு பகுதியில், இரத்த கட்டிகள் தோன்றும் போது ஏற்படும் நிலையை குறிக்கிறது. சிரை இரத்த உறைவு (ஒரு நரம்பில் இரத்த உறைவு ஏற்படுதல்) என்பது கர்ப்ப காலத்தில் அல்லது குழந்தை பிறப்பிற்கு பிறகு முதல் 6 வாரத்தில் ஏற்படுவது இன்னும் அசாதாரணமானது ஆகும். இவை 1000 பெண்களில் 1-2 பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகின்றன. எனினும், கர்ப்பம் தரித்தல், DVT ஏற்படுவதற்கான உங்களது அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன, குறிப்பாக குழந்தை பிறப்பிற்கு பிறகு உடனடியாக இவை ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம். 

கர்ப்பமாக இல்லாத பெண்களில் ஏற்படும் இரத்த கட்டிகளுடன் ஒப்பிடும்போது, கர்ப்ப காலத்தின் போது இரத்த கட்டிகள் உருவாவதற்கான அபாயங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணம், குழந்தை பிறப்பதற்காக உங்கள் உடல் உங்களை எவ்வாறு தயார் செய்கிறது என்பதன் அடிப்படையிலும், அதன்பிறகு, உருவாகும் கட்டிகள் உங்களை எவ்வாறு அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதன் அடிப்படையிலும் அமைகிறது. 

1. கர்ப்பத்தின் பிந்தைய நிலைகளில், கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி காரணமாக, இடுப்புப்பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்பட்டு, கால்களுக்கு இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

2. குழந்தை பிறப்பிற்குப் பிறகான அசைவின்மை காரணமாக, கால்கள் மற்றும் கைகளுக்கு இரத்த ஓட்டம் வரையறுக்கப்படுகிறது.

இரத்த ஓட்டம் தடைபடும் போது, சில செல்கள் உறைந்து, பெண்களுக்கு DVT ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.

உங்களது கர்ப்பகாலத்தின் போது, முதல் 3 மாதங்கள் உட்பட, எந்த நேரத்திலும் உங்களுக்கு DVT ஏற்படலாம். எனவே நீங்கள் அபாயத்தில் உள்ளீர்களா என்பதை குறித்து உங்களது மருத்துவர் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். பல்வேறு கூடுதல் அபாய காரணிகளும் இருக்கின்றன, அவை கருவுற்றிருக்கும் பெண்களில் இரத்தக்கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். அவை:

  • இரத்தக் கட்டிகள் அல்லது உறைவு கோளாறுகள் கொண்ட குடும்ப வரலாறு இருத்தல்
  • குழந்தை பிறப்பின்போது அல்லது C-செக்ஷன் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள்
  • கருவுற்றிருக்கும்போது நீரழிவு நோய், இதயம், அல்லது நுரையீரல் நிலைகள் ஏற்படுதல்

கர்ப்பகாலத்தின் போது வெரிகோஸ் வெயின்ஸ்

கர்ப்ப காலத்தின் போது, அதிகப்படியான இரத்த அளவின் காரணமாக நரம்புகள் பெரிதாகி, கால்களின் ஒற்றை-வழி வால்வுகளில் சேதம் ஏற்பட்டு, அதனால் வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படலாம். வெரிகோஸ் வெயின்ஸை தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். சிகிச்சை அளிக்கப்படாத தீவிரமான வெரிகோஸ் வெயின்ஸ் நோயானது, DVT ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணியாகும்.

எனக்கு DVT ஏற்படுவதற்கான அபாயத்தை நான் குறைக்க முடியுமா?

உங்களுக்கு இரத்த உறைவு கோளாறு அல்லது இரத்த உறைவு கோளாறுடன் கூடிய குடும்ப வரலாறு இருப்பதை உங்கள் மருத்துவருக்கு தெரியப்படுத்துங்கள். வழக்கமான உடற்பயிற்சி, திறமையான எடை மேலாண்மை, உங்கள் கால்களை உயர்த்தி பிடித்தல், மற்றும் சுருக்க காலுறைகள் அணிந்து கொள்ளுதல் போன்றவை, வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படுவதற்கான அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும்.

உங்களுக்கு த்ரோம்போபிலியா இருக்கிறதா என முடிவு செய்ய, இரத்தப் பரிசோதனை அவசியமாகும். ஏனெனில் இவை உங்களது இரத்த கட்டிகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஒருவேளை உங்களுக்கு இந்நிலை இருந்தால், உங்களது மருத்துவர் உங்களுக்கு இரத்த மெலிவூட்டிகளை வழங்கத் தொடங்குவார். இரத்தத்தை மெலிதாக்க, இரத்த உறைவுக்கு எதிர்ப்பு மருந்தாக செயல்படும் ஹெப்பரின் என்ற மருந்து ஊசியாக செலுத்தப்படுலாம்.

மேலும் தகவலுக்கு, அவிஸ் வாஸ்குலர் மையத்திலுள்ள எங்களது மருத்துவரை அழைத்து, உங்கள் கவலைகளைக் குறித்து கலந்தாலோசியுங்கள். 

Deep Vein Thrombosis Treatment In Hyderabad | Chennai

For Appointment Call:

Hyderabad: 9989527715

Chennai: 7847045678

Branches

https://www.avisvascularcentre.com/wp-content/pg-soft-slot/
Home
Services
Doctors
Branches
Blog
https://recyclestore.bigcartel.com/
https://hprojekty.sk/slot-gacor/