வாஸ்குலார் நோய்கள் சில விரும்பத்தகாத பக்க விளைவுகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். அவற்றுள் ஒன்றாக, கால் நரம்பைச் சுற்றிலும் உள்ள தோலில் உருவாகும் கால் புண்களும் இருக்கலாம்.
கால் புண்கள் தானாக ஆறாத காயங்கள் ஆகும். இவை படிப்படியாக மோசமடைந்து, நீங்கள் பல்வேறு தோல் மற்றும் எலும்பு தொற்றுகளுக்கு ஆளாகக் கூடிய தீவிர அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இவற்றிற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, உடனடியான மருத்துவ சிகிச்சையை நாடவும், அதன்பால் மேலும் சிக்கல்களை தவிர்க்கவும் உதவிடும்.
சிரை கால் புண்கள்
சிரை கால் புண்கள் என்பவை மிகப் பொதுவாக கீழ் முனை புண்களாகும், மேலும் ஏற்படக்கூடிய அனைத்து கால் புண்களிலும் 70% இவை இடம்பெறுகின்றன. நமது கால்களில், இதயத்திற்கு இரத்தத்தை மேல்நோக்கிய திசையில் எடுத்துச்செல்லும் வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள் பலவீனமடைந்து, தவறாக செயல்படும் போது, இரத்த ஓட்டம் பின்பக்கமாக கால்களை நோக்கி பாய்கின்றன, இந்நிலை சிரை பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. திசுக்கள் உடைந்து, இரத்தம் உங்களது கால்களில் தேங்கத் தொடங்கும்போது நரம்புகள் வீங்க தொடங்குகின்றன.
சிரை அழுத்தம் அதிகமாகும்போது, திரவம், நரம்புகளுக்கு வெளியே பாயத் தொடங்குகின்றன. தோல் மற்றும் சுற்றியுள்ள திசுக்கள் படிப்படியாக உடைந்து புண்களை ஏற்படுத்துகின்றன. கால் புண்கள் ஏற்படும் போது, நீங்கள் வீக்கம் மற்றும் கால்களில் பாரத்தை உணர்வீர்கள்.
சிரை பற்றாக்குறை ஏற்படும் போது, புண்கள் தோன்றுவதற்கு முன்னரே, இவை மேலும் பிற அறிகுறிகளை உருவாக்கிவிடுகின்றன.
சிரை தேக்கம் டெர்மடிடிஸ் அல்லது எக்ஸிமா: தோல் அழற்சி, பெரும்பாலும் சிரை பற்றாக்குறையின் முதல் வெளிப்பாடாக அமைகின்றன, இவை முறையாக கவனிக்கப்பட வேண்டும். உங்கள் கணுக்காலைச் சுற்றிலும் உள்ள தோல் பகுதி மஞ்சள் நிறமாக, பழுப்பு நிறமாக, அல்லது சிவப்பு நிறமாக மாறலாம். கசிவு ஏற்படக் கூடிய அல்லது செதில்களாக தோற்றமளிக்கும் புண்கள் உருவாகிடும்.
ஹைப்பர் பிக்மென்டேஷன்: தோல் நிறமியில் ஏற்படும் வியத்தகு மாற்றங்கள், பொதுவாக, சிரை பற்றாக்குறை முன்னேறிய நிலையில் இருப்பதை குறிக்கின்றன. உங்கள் கால்களில் உள்ள தோலின் குறிப்பிடத்தக்க பகுதிகள் கருமையாகவும் அல்லது உங்களது கால்கள், பாதம், மற்றும் கணுக்கால்களில் உள்ள தோல் சிவந்த-பழுப்பு நிறமாக மாறுவதையும் நீங்கள் கவனிக்கலாம். இந்நிலை, நீங்கள் உடனடியாக மருத்துவ பராமரிப்பை நாட வேண்டும் என்பதன் அவசியத்தை குறிக்கிறது.
லிபோடெர்மாடோஸ்கிளிரோசிஸ்: இவை, கீழ் கால்களில் உள்ள தோலின் மாற்றத்தைக் குறிக்கின்றன. இதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படாத போதும், இதுவும் நரம்பு கோளாறுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மூன்றில்-இருவர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கால் வலி அல்லது வீக்கம், தோல் தடித்தல்/கடினமாதல், தோலில் நிறமாற்றம் அல்லது கால் புண்கள் உட்பட பல்வேறு அறிகுறிகளும் ஏற்படலாம்.
சிரை கால் புண்களுக்கான சிகிச்சை
சிரை கால் புண்களுக்கான சிகிச்சையானது, கால் நரம்புகளில் உருவாகும் உயர் அழுத்தத்தை கட்டுப்படுத்துவதையும், புண்களுக்கு சிகிச்சை அளிப்பதையும் உட்படுத்துகிறது.
புண்களுக்கு டிரெஸ்ஸிங் செய்தல் மற்றும் சுருக்க கட்டுகள்
சிகிச்சையின் முதல் நிலை, புண்களைச் சுற்றிலும் உள்ள இறந்த திசுக்களை நீக்கி, பொருத்தமான டிரஸ்ஸிங்கை பயன்படுத்துதல். முறையான இடைவெளிகளில் பொருத்தமான மறு-டிரஸ்ஸிங் செய்யப்படுவது அவசியம், இவை புண்கள் குணமாவதற்கான சிறந்த நிலைகளை வழங்குகின்றன. பாதிக்கப்பட்ட புண்களில் மேலும் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, ஆன்ட்டிபயாட்டிக்குகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
உங்கள் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மேலும் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்க, பாதிக்கப்பட்ட காலை சுற்றிலும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுருக்க கட்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும். சிரை கால் புண்களுக்கான சிகிச்சையின் முக்கிய அம்சமே, நான்கு அடுக்கு கட்டுகளைப் பயன்படுத்தி சுருக்கத்தை ஏற்படுத்துவது ஆகும்.
குறைந்தபட்சம் ஆக்கிரமிப்பு கொண்ட மாற்று சிகிச்சைகள்
எண்டோவெனஸ் அப்லேஷன் என்ற குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட தொழில்நுட்பம், சிரை புண்களுக்கு சிகிச்சையளிப்பதில், மிகவும் பயன்மிக்கதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்லேஷன் அல்லது வெப்ப செயல்முறை, பொதுவாக 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்ளும். மேலும் இது, சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நரம்பிற்கான தோலில், ஊசி மூலம் மருந்தை செலுத்துவதையும், இறந்த நரம்புகளை ரேடியோ அலைகள் அல்லது லேசர் கொண்டு வெப்பமாக்குவதையும் உட்படுத்தப்படுகிறது.
இந்த குறைந்தபட்ச ஆக்கிரமிப்புக் கொண்ட முறைகள், பாரம்பரிய திறந்த சிரை அகற்றும் செயல்முறையை போன்றே பயன்மிக்கதாக இருப்பதாக புதிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. ஏனெனில், புண்ணை குணப்படுத்துதல் மற்றும் மீண்டும் புண்கள் தோன்றுவதற்கான விகிதம் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் செயல்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஒத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சை தேர்வுகள் குறித்த மேலும் தகவல்களுக்கு, அவிஸ் வாஸ்குலர் மையத்திலுள்ள நிபுணர்களை அழைக்கவும்.
Venous Leg Ulcer Treatment In Hyderabad | Chennai | Vijayawada | Visakhapatnam | Rajahmundry
For Appointments Call:
Andhra Pradesh & Telangana 9989527715
Chennai : 7847045678