வெரிகோஸ் வெயின்ஸின் நிலை மற்றும் அதன் சிகிச்சை குறித்து அபரிமிதமான தகவல்கள் இருக்கையில், அவற்றில் உண்மைகள் எவை என்பதை கண்டறிந்து மீதியுள்ள கட்டுக்கதைகளை நாம் அகற்ற வேண்டும்.
பெரும்பாலானவர்கள் தங்களது கால்களில் நீல அல்லது ஊதா நிற வீக்கம் மிகுந்த நரம்புகளை காண்கையில், அவற்றை கூர்ந்து கவனிக்க முடியாத மற்றும் வெறும் ஒப்பனை சிக்கல்களாகவே கருதுகின்றனர். எனினும், கட்டுக்கதைகள் தவறான தகவல்களை நிலைநிறுத்துவதால், மக்கள் தங்களது நரம்புகளுக்கான சிகிச்சையை ஒத்திவைத்து, அவர்களின் ஆரோக்கியத்தை அபாயத்திற்கு உள்ளாக்குகின்றனர்.
கட்டுக்கதை : வெரிகோஸ் வெயின்ஸ் குணப்படுத்த முடியாதவை, மற்றும் அவற்றிற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது பயனற்றது
வெரிகோஸ் வெயின்ஸ் ஒரு முன்னேறக்கூடிய நோயாகும், மேலும் இது வெறுமனே ஏற்படக்கூடிய ஒப்பனை பிரச்சனையைக் காட்டிலும் தீவிரமானது. பலருக்கு, இது சிரை பற்றாக்குறையின் முதல் அறிகுறியாக இருக்கக்கூடும். இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது பல்வேறு பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
நரம்புகளில் உள்ள சேதமடைந்த வால்வுகளின் காரணமாக ஏற்படும் மோசமான இரத்த ஓட்டமானது, நரம்புகளுக்குள்ளே தொடர்ந்து அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே இரத்த நாளங்கள் உடையக்கூடியதாக மாறிடும். அதனால் ஒரு சிறு கீறல் கூட உங்கள் கால்களில் உள்ள தோலை எளிதில் உடையச் செய்து காயத்தை ஏற்படுத்தும். வெரிகோஸ் வெயின்ஸ் நோயானது மேலோட்டமான த்ரோம்போப்ளெபிடிஸ் ஏற்படுவதற்கான ஒரு பொதுவான காரணமாக உள்ளது. இந்நோய் குறிப்பாக கால்களில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகளில் இரத்தக் கட்டிகளை உருவாக்கக் கூடிய ஒரு அழற்சி செயல்முறை ஆகும்.
இன்று, கிடைக்கக்கூடிய சிகிச்சை தேர்வுகளைக் கொண்டு, இந்நோய் முன்னேறாமல் இருப்பதற்கும் மற்றும் நோயின் நிலையை நடுத்தரமாகவே நிர்வகிக்க உதவுவதற்கும் பல்வேறு விஷயங்களை உங்களால் செய்ய முடியும்.
கட்டுக்கதை #2: சிகிச்சை பெற்ற பிறகும், நரம்புகளில் இந்நோய் எப்போதும் ஏற்படும்
துல்லியமற்ற பூர்வாங்க நோயறிதல், போதிய ஆரம்ப அறுவைசிகிச்சை இல்லாமை மற்றும் இந்நிலையின் முன்னேற்றம் ஆகியவை வெரிகோஸ் வெயின்ஸ் மீண்டும் ஏற்படுவதற்கான முதன்மையான காரணங்களாக இருக்கலாம் என பல்வேறு சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப விவரங்களில் கவனம் செலுத்துவது இந்நோய் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் குறைக்கக் கூடும். எனவே நிபுணத்துவம் வாய்ந்த வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணர்களின் பங்களிப்பு மிகைப்படுத்தப்பட முடியாதது.
நல்ல முடிவுகளுக்கு, பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, ஆயிரக்கணக்கான நரம்புகளில் ஊசி செலுத்திய ஒரு வாஸ்குலார் நிபுணர் அவசியம்.
கட்டுக்கதை #3: வெரிகோஸ் வெயின்ஸ் நோய்க்கான சிகிச்சை வலி மிகுந்தது
ஆரம்ப கால சிகிச்சை நடைமுறைகளான நரம்பு அகற்றுதல் அல்லது இணைத்தல் செயல்முறைகள் மிகவும் வலி மிகுந்தவையாக இருந்தன. இவற்றில் பெரும்பாலும் தழும்புகளும், அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்களும் ஏற்பட்டன. தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் பல ஆக்கிரமிப்பு-அல்லாத சிகிச்சை தேர்வுகள் கிடைக்கின்றன.
நோயாளிகள் பெரும்பாலும் குறைந்தபட்ச – ஆக்கிரமிப்பு கொண்ட நரம்பு செயல்முறைகளையே லேசான அசௌகரியம் மிக்கதாகவும், அரிதாக வலி மிகுந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். ஊசி குத்தும் வலி, மற்றும் மருந்தினால்-ஏற்படும் எரிச்சல் உணர்வு போன்றவை பொதுவாக ஏற்படும்.
கட்டுக்கதை #4: வெரிகோஸ் வெயின்ஸ் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு நோய்
வெரிகோஸ் வெயின்ஸ் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் என நம்புவதே ஒரு கட்டுக்கதை ஆகும். 50 வயதிற்கும் மேற்பட்டவர்களில் இந்நோய்க்கான அபாய காரணிகள் அதிகமாக இருந்தபோதிலும், இளம் வயதிலேயும் உங்களுக்கு இந்நோய் ஏற்படலாம். இன்று, இருபதுகளில் உள்ள பெரும்பாலானோருக்கும் இந்நோய் இருப்பது அறியப்படுகிறது.
உங்களது வாழ்க்கை முறை, மரபணுக் காரணிகள், உடல் பருமன், மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் எந்த வயதிலும் வெரிகோஸ் வெயின்ஸ் உங்களைத் தாக்கலாம்.
கட்டுக்கதை #5: அனைவருக்கும் கால் வலி உண்டு, ஒருவேளை அது வயதின் காரணமாக இருக்கலாம்!
வயது அதிகரிக்கும் போது, நரம்பில் உள்ள வால்வுகள், நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையை படிப்படிப்படையாக இழப்பதன் காரணமாக, உங்களுக்கு வெரிகோஸ் வெய்ன்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது உண்மை. எனினும், பல்வேறு பிற காரணிகளின் மூலமாகவும் நரம்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதும், மேலும் இவை முன்னேற்றமடைந்து, தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு சரியான நேரத்தில் அறியப்படுவது அவசியம் என்பதும் உண்மையாகும்.
கட்டுக்கதை #6: வெரிகோஸ் வெயின்ஸ் நோய்க்கான சிகிச்சையை காப்பீடு உள்ளடக்காது
பெரும்பாலான முன்னணி காப்பீடு நிறுவனங்களால், வெரிகோஸ் வெயின்ஸ் நோய்க்கான சிகிச்சையானது “மருத்துவ ரீதியாக அவசியமானதாக” கருதப்படுகிறதே ஒழிய, “ஒப்பனைப் பராமரிப்பாக” கருதப்படுவதில்லை.
உங்களுக்கு பொருந்தக்கூடிய சிறந்த சிகிச்சை தேர்வுகள் குறித்து மதிப்பீடு செய்ய, அவிஸ் வாஸ்குலார் மையத்திலுள்ள எங்களது மருத்துவர்களுடன் பேசுங்கள்.
Varicose Veins Treatment In Hyderabad | Bengaluru |Mysore | Visakhapatnam | Vijayawada | Chennai |Coimbatore | Tirupati | Rajahmundry | Kolkata | Madurai | Kakinada
For Appointment Call
Telangana: 9989527715
Andhra Pradesh: 9989527715
Tamilnadu: 7847045678
Karnataka: 8088837000
Kolkata: 9154089451