வெரிகோஸ் வெயின்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத போது என்னவாகும்

varicose veins risk's

இரத்தம் எதிர் திசையில் செல்வதை தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நரம்புகளில் உள்ள ஒரு-வழி வால்வுகள் பலவீனமாகவும், தவறாகவும் செயல்படும்போது, நரம்புகளில் இரத்தம் தேங்கத் தொடங்குகிறது. அதன்பின், அதிகபட்ச இரத்த ஓட்டத்தினால் ஏற்படும் அழுத்தத்தை கையாள முடியாமல் நரம்புகளில் வீக்கம் மற்றும் முறுக்கப்பட்ட நிலை ஏற்படுகிறது, இதன் விளைவாக இறுதியில் வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படுகிறது.

வெரிகோஸ் வெயின்ஸ் நோயினை, ‘சிலந்தி நரம்புகளுடன்’ சிலர் குழப்பிக் கொள்கின்றனர். சிலந்தி நரம்புகள், தோலின் மேல் பரப்பிற்கு சற்று கீழே சிறு கிளைகளை போல அல்லது சிலந்தி வலையைப் போல தோற்றமளிக்கக் கூடியவை. அவை பொதுவாக நீல அல்லது சிவப்பு வரிகளாகவும், 1 மில்லிமீட்டர் விட்டத்தை விட சிறிய அளவிலும் தோன்றும். பொதுவாக இவை வலியற்றதாகவும், பிற ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தாதவையாகவும் இருக்கின்றன. பொதுவாக இவை கால் வீக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சிலந்தி நரம்புகளுக்கு மட்டும் சிகிச்சையளிப்பது பெரும்பாலும் சிக்கலாகவே கருதப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படாத வெரிகோஸ் வெயின்ஸ் நோயானது அதன் தொடர்புடைய மருத்துவச்சிக்கல்களை கொண்டிருக்குகிறது.

varicose veins

அறிகுறிகள் இல்லை என்பதால், ஒரு போதும் நீங்கள் அதனை உணர மாட்டீர்கள் என்று அர்த்தமில்லை. உண்மையில், சிகிச்சையளிக்க எத்தனை தாமதமாகிறதோ, விரைவில் நீங்கள் வலியை உணரத்தொடங்குவீர்கள். வெரிகோஸ் வெய்ன்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத போது ஏற்படக்கூடிய சில மறை அபாயங்களை இங்கே காணலாம்.

1) அரிப்பு – சிகிச்சை அளிக்கப்படாத வெரிகோஸ் வெயின்ஸ் நோயிற்கான லேசான மற்றும் மிகப் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக இருப்பது, “அரிப்பு” உணர்வு. இது பொதுவாக ‘உலர்ந்த தோல்’ என கருதப்பட்டு, ஆயிண்ட்மென்ட் மற்றும் லோஷன்கள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

2) அதிகமான வலி மற்றும் வீக்கம் – நரம்புகளில் அதிக அழுத்தம் ஏற்படுகையில், இரத்தத்தில் இருக்கும் நீர் சில நேரங்களில் அருகில் உள்ள தசைகளில் கசிந்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சிகிச்சை அளிக்கப்படாத வெரிகோஸ் வெயின்ஸ் நோயானது, நரம்புகளில் மேலும் அதிக சேதத்தை ஏற்படுத்தி, வீக்கம் மற்றும் வலியை அதிகப்படுத்துகிறது.

3) பலவீனம் – சிகிச்சை அளிக்கப்படாத போது, வெரிகோஸ் வெயின்ஸ் உங்களது அன்றாட வாழ்க்கையிலும் தன் வேலையை காட்டிடும். கால்களில் ஏற்படும் பலவீனம் உங்களை சோர்வாக்கக்கூடும், மேலும் உங்களது பணி அல்லது வாழ்க்கை பாணியில் நீங்கள் சுறுசுறுப்பாக, நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலையில் இருந்தால், பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

4) லிப்போடெர்மடோஸ்கிளிரோசிஸ் – சிரை பற்றாக்குறையின் இந்நிலையானது, வெரிகோஸ் வெயின்ஸ் நரம்புகளை சுற்றியுள்ள தோலினை கடினமாக்கி, நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும். இது நரம்புகளை சுற்றிலும், குறிப்பாக கணுக்கால்களில், வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

5) புண்கள் – நரம்புகளில் உள்ள சேதமடைந்த வால்வுகளின் காரணமாக ஏற்படும் மோசமான இரத்த ஓட்டம், நரம்புகளுக்குள் தொடர்ந்து அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்த நாளங்கள் எளிதில் முறிகிறது, சிறு கீறல் கூட உங்களது கால்களில் உள்ள தோலை எளிதாக கிழியக்கூடியதாகவும், அல்சர்கள் உருவாக்கக்கூடியதாகவும் மாற்றிடும். தன்னிச்சையான இரத்தப்போக்கு ஏற்படக்கூடும், மேலும் காயங்கள் குணமடைய அதிக காலம் எடுக்கும்.

6) த்ரோம்போஃப்ளெபிடிஸ் – வெரிகோஸ் வெயின்ஸ் என்பது மேலோட்டமான த்ரோம்போஃப்ளெபிடிஸ் என்பதன் பொதுவான காரணமாகும். இது ஒரு சுழற்சி செயல்முறை. இந்நிலை இரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது, இது ஒன்று அல்லது மேற்பட்ட நரம்புகளில், குறிப்பாக கால்களில், தடுப்பை ஏற்படுத்துகிறது.

7) ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் – எப்போதாவது, வெரிகோஸ் வெயின்ஸில் இரத்தக் கட்டிகளை கொண்டிருப்பவர்கள் ஆழமான நரம்புகளில் இரத்தக்கட்டிகளை உருவாக்கிக் கொள்ளக்கூடும். தடுக்கப்பட்ட நரம்புகள், ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் (DVT) போன்ற கொடிய நிலைக்கும் வழிவகுக்கும். இரத்த கட்டிகள் உடைந்து, நுரையீரலை நோக்கி நகர்ந்து, நுரையீரல் தக்கையடைப்பு என்ற வாழ்வை அச்சுறுத்தும் நிலையை ஏற்படுத்துகையில், DVT அபாயகரமானதாக மாறுகிறது.

சிறிய அளவிலான வெரிகோஸ் வெயின்ஸ் நோயானது, பயணத்தின்போது அல்லது நீண்ட நேரங்களுக்கு அமர்ந்திருக்கும்போது சுருக்கக் காலுறைகளை(கம்ப்ரெஸ்ஸன் ஸ்டாக்கிங்ஸ்) பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக நிவாரணம் கிடைக்கக்கூடும். ஆனால் ஒருவேளை நரம்புகள் பெரிதாகவும், வலியை ஏற்படுத்தக் கூடியதாகவும், நிறம் மாறியும் மற்றும் வீக்கமடைந்தும் இருந்தால், உடனடியாக உங்களது மருத்துவரை ஆலோசிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு அதிகரிக்கும் கோளாறு என்பதனால், இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது மிகவும் மோசமடையக்கூடும்.

Varicose Veins Treatment in Chennai| Coimbatore  |Tirupati | Hyderabad | Vijayawada | Visakhapatnam | Bangalore | Mysore |

Shares
Follow us