கால்களில் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் விரிவடைந்து, வெறுக்கத்தக்க வங்கியில் புடைத்து துருத்திக் கொண்டிருக்கின்ற நரம்புகளான வெரிகோஸ் நரம்புகள் ஒரு பெரிய அசௌகரியமாகவும், அழகியல் சார்ந்த கவலையாகவும் உள்ளன.. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அத்தியாவசியமாக இருப்பதால் அவைகளுக்கு சிகிச்சை அவசியமாக உள்ளது.
வெரிகோஸ் நரம்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடைமுறைகள் பல ஆண்டுகளாக விஸ்தரித்து வருகின்றன. அவற்றுள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதே கேள்வியாக இருக்கும். கடந்த காலங்களில், நோயாளிகளுக்கு மிகவும் ஊடுருவும் அறுவை சிகிச்சை முறையான “வெயின் ஸ்ட்ரிப்பிங்” என்ற ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருந்தது..அதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முழு மயக்க மருந்து அளித்து, பல வாரங்கள் வரை நீண்ட மற்றும் வலிமிகுந்த குணமடைதல் காலத்தை எதிர்கொள்ள வேண்டும், மேலும் அதிக சிகிச்சை அபாயங்களும் உண்டு. ஏற்கனவே சில மருத்துவ பிரச்சினைகளோடு இருக்கின்ற நோயாளிகளுக்கு அபாயம் அதிகளவில் இருப்பதால், அவர்களுக்கு நரம்புகளுக்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியாது, அவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு குணமடைதல் மெதுவாக இருப்பதாலும், பல நாட்கள் வேலையில் இருந்து விடுப்பு தஎடுக்க வேண்டியிருப்பதாலும் குணமடைதல் கடினமாக இருப்பதாக உணர்ந்தனர்.
நரம்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் சமீபத்திய வளர்ச்சியானது, ஒரு மருத்துவப் பிசின் தயாரிப்பை உள்ளடக்கியுள்ளது. இந்த வலைப்பதிவில், இந்த சிகிச்சை முறை பற்றி நாம் மேலும் விவாதிப்போம்.
வெரிகோஸ் நரம்புகள்
பொதுவாக வெரிகோஸ் நரம்புகள் என்பவை நரம்புகள் பற்றாக்குறையின் அறிகுறியாகவும், உடலில் உள்ள இரத்த ஓட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகின்றன.
உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் எடுத்துச் செல்கின்ற நரம்புகளில் உள்ள வால்வுகள் பழுதடையும் போது, நரம்பு ரிஃப்ளக்ஸ் ஏற்படுகின்ற சாத்தியமுள்ளது. இரத்தம் பின்னோக்கிப் பாய்ந்து, கால் நரம்புகளில் தேங்குகிறது என்பது தான் இதன் அர்த்தமாகும். அதன் காரணமாக கால்களில் உள்ள நரம்புகள் வீங்கி, புடைத்து துருத்திக் கொண்டிருப்பது வெரிகோஸ் நரம்புகள் எனப்படும்.
வெரிகோஸ் நரம்புகளுக்கான பிசின் சிகிச்சை என்றால் என்ன?
தவறான வால்வுகளுடன் நரம்புகளை மூடுகின்ற ஒரு சிறப்பு வகை “சூப்பர் பிசின்” இந்த சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான வெப்பம் அல்லது அறுவை சிகிச்சை “வெயின் ஸ்ட்ரிப்பிங்” செயல்முறை மூலம் நரம்புகளை மூடுகின்ற எண்டோடெர்மல் அபிலேஷன் (எவ்லா) போன்ற வெரிகோஸ் நரம்புகளை மூடும் அதே வேலையை இந்தப் பசை மேற்கொள்கிறது.
பிசின் சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
மரத்துப் போகின்ற மருந்து செலுத்தப்பட்டு, முழங்காலுக்கு அருகில் உள்ள தோல் உணர்ச்சியற்றதாக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நரம்புக்குள் ஒரு ஊசி செருகப்படுகிறது. ஊசியின் மேல் ஒரு கம்பி அனுப்பப்பட்டு ஊசி திரும்ப எடுக்கப்படுகிறது. பின்னர் வயருடன் நரம்பு வழியாக வடிகுழாய் அனுப்பப்படுகிறது. பிசின் உட்செலுத்தப்பட்டு, வடிகுழாய் மீண்டும் வெளியே இழுக்கப்படுகிறது. சுமார் 30 விநாடிகளுக்கு வெரிகோஸ் நரம்புகளுக்கு மேலேயுள்ள மேற்பரப்பு சருமத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சில நிமிடங்களில், பிசின் நரம்புகளை சீல் செய்து, மூடுகிறது. இப்போது, அடுத்த செட் அளவு பிசின் பயன்படுத்தப்படுகிறது, வடிகுழாய் திரும்ப இழுக்கப்பட்டு, அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நரம்பின் நீளம் முழுதும் இந்த செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. முழு செயல்முறையும் அல்ட்ராசோனிக் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
வெரிகோஸ் நரம்புகளுக்கான ஸ்கெலரோதெரபியும், நீக்குதலும்
ஸ்க்லரோதெரபி என்பது சேதமடைந்த, விகாரமான நரம்புகளை நீக்குகின்ற ஒரு குறைவாக ஊடுருவும் நடைமுறையாகும். இந்த செயல்முறையின் போது, பாதிக்கப்பட்ட நரம்புகளில் ஒரு ஸ்க்லரோசிங் கரைசல் உட்செலுத்தப்படுகிறது, இதன் கலவையானது சிகிச்சையளிக்கப்படும் வெரிகோஸ் நரம்புகளின் அளவைப் பொறுத்து வேறுபடும்.
ஸ்க்லரோசிங் காரணியானது சேதமடைந்த நரம்புகளுக்குள் கட்டிகளை உருவாக்க உதவி, அவற்றை மூடுகிறது. இது ஆரோக்கியமான நரம்புகளுக்கு இரத்தத்தைத் திருப்பி விட்டு, புதிய நரம்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அழிந்த நரம்புகள் காலப்போக்கில் உடலால் இயற்கையாகவே கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.
நீக்குதல் முறையின் மூலம், ரேடியோ அலை அல்லது லேசர் ஆற்றலால் அசாதாரணமான நிலையில் உள்ள நரம்புகளுக்கு வெப்பமூட்டப்பட்டு, அவை அழிக்கப்படுகின்றன. வெரிகோஸ் நரம்புக்குள் வடிகுழாய் அல்லது ஒரு மெல்லிய குழாய் செருகப்படுகிறது. நோயாளியின் உட்புறத்தைப் பார்க்க அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தப்பட்டு, வடிகுழாயை முழு நரம்பு வழியாக செலுத்துவதை மருத்துவர் வழிநடத்துகிறார். முனை சரியான நிலையில் இருக்கும் போது, லேசர் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்ட வெப்பம் நரம்பின் உள்ளே செலுத்தப்பட்டு,. சேதமடைந்த நரம்புகளை அழித்து, அவை மூடப்படும். இறந்த திசுக்கள் படிப்படியாக உடலால் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.
அவிஸ் வாஸ்குலர் மையத்தில், எங்கள் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு நரம்பு கோளாறுகளுக்கு நீக்குதல், ஸ்க்லரோதெரபி மற்றும் பிசின் சிகிச்சையளித்து வருகின்றனர். நடைமுறைகள், சிகிச்சைத் தகுதி மற்றும் நடைமுறைச் செலவு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, எங்கள் மையத்துக்கு வருகை தரவும்.
Varicose Veins Treatment In Hyderabad | Bengaluru |Mysore | Visakhapatnam | Vijayawada | Chennai |Coimbatore | Tirupati | Rajahmundry | Kolkata | Madurai | Kakinada
For Appointment Call
Telangana: 9989527715
Andhra Pradesh: 9989527715
Tamilnadu: 7847045678
Karnataka: 8088837000
Kolkata: 9154089451