முக்கிய வார்த்தைகள்: ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள், கால்களில் இரத்த உறைவு ஏற்படுவதற்கான காரணங்கள்

deep vein thrombosis

முக்கிய வார்த்தைகள்: ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள், கால்களில் இரத்த உறைவு ஏற்படுவதற்கான காரணங்கள் https://www.avisvascularcentre.com/ 

கோவிட்-19 மற்றும் ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ்ஸிற்கு இடையே உள்ள இணைப்பு 

கோவிட்-19 தொற்று மற்றும் அதன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்து உலகம் இன்னும் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், புதிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. கோவிட்-19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் இருமல், மூக்கு ஒழுகுதல், உடல்வலி, சோம்பல், வறட்டு இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற தீவிரமான சுவாச கோளாறுகளை அறிகுறிகளாக கொண்டிருந்தனர். எனினும் கோவிட்-19, நுரையீரலை மட்டும் தாக்குவதில்லை, குறிப்பாக தீவிரமான நிகழ்வுகளில். கோவிட்-19 நோய்த்தொற்றானது, இரத்த கட்டிகள் உருவாவதற்கும் வழிவகுப்பதாக சமீபத்திய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. கோவிட்-19 நோய்த்தொற்று, இரத்தக் கட்டிகள் மற்றும் ஆழமான நரம்பு த்ரோம்போசிஸை (DVT) உருவாக்குகிறது என்பதற்கான எந்தவித சான்றும் தற்போது வரை இல்லை என்றபோதிலும், தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் DVT மற்றும் பிற இரத்த-உறைவு தொடர்பான கோளாறுகளுக்காக கண்காணிக்கப்படுகின்றனர். 

  • DVT என்றால் என்ன? DVT என்பது ஆழமாக-அமைந்திருக்கக்கூடிய நரம்பில் ஏற்படும் இரத்த உறைவிற்கான தீவிரமான நிலை ஆகும். இந்த இரத்தக் கட்டிகள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகலாம், ஆனால் பெரும்பாலும் அவை உங்களது கீழ் கால்களில் தோன்றுகின்றன. இவை ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இரத்தத்தை மெலிதாக்கக் கூடிய மருந்துகள் மற்றும் வாழ்க்கைப் பாணியில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். சில நிகழ்வுகளில், அறுவைசிகிச்சை தேவையாக உள்ளது. DVT க்கான சிறந்த சிகிச்சையாக லேசர் அறுவை சிகிச்சை திகழ்கிறது, ஏனெனில் ஒரே அமர்வில் அனைத்து சேதமடைந்த நரம்புகளையும் இது நீக்கிவிடுகிறது. 
  • கோவிட்-19 எவ்வாறு இரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது? தீவிரமாக பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளில், இரத்தக் கட்டிகள் அபாயகரமானவையாக இருக்கக்கூடும், ஏனெனில் அவை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, எப்போதெல்லாம் காயம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இரத்த உறைவிப்பான் புரதம், இரத்தப்போக்கை நிறுத்த உதவுகிறது. இவ்வாறுதான் பொதுவான காயங்கள் குணமடையும். எனினும், கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் சில நோயாளிகள் உயர்ந்த நிலை இரத்த-உறைவு புரதத்தின் தாக்கத்தை எதிர்கொள்வர். இந்த புரதங்களின் வேகமானது செல்களைத் தாக்கி, தமனிகள், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகளை தூண்டி, DVT அல்லது நுரையீரல் தக்கையடைப்பு (நுரையீரலில் ஏற்படும் இரத்த உறைவு) ஏற்படுவதற்கான உச்சகட்ட அபாயத்தை நோயாளிகளுக்கு ஏற்படுத்துகிறது. இரத்தக் கட்டிகள் தோன்றுவதற்கான சரியான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. 
  • DVT க்கான அறிகுறிகள் யாவை? நீண்டகாலத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால், DVT அபாயகரமானதாக ஆகக்கூடும். இரத்தக்கட்டிகள் நுரையீரலை நோக்கி பயணம் செய்து, நுரையீரல் தக்கையடைப்பை ஏற்படுத்தும், இந்நிலை நுரையீரலுக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை தடை செய்து அதன்பால் இதயத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதால் இது வாழ்வை அச்சுறுத்தும் நிலை ஆகும். DVT க்கான சில பொதுவான அறிகுறிகள் இங்கே வழங்கப்படுகின்றன: 
  • ஒரு காலில் தசைப்பிடிப்பு.
  • காலில் வீக்கம் (பொதுவாக ஒரு காலில்). 
  • வலிமிகுந்த பகுதியை சுற்றியுள்ள தோல் வெப்பமாக உணரப்படுத்தல்.
  • வலிமிகுந்த பகுதியை சுற்றியுள்ள தோல் நிறம் மாறி, சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தோன்றுதல்.
  • நரம்புகள் தொடுவதற்கு கடினமாக இருத்தல் அல்லது பெரிதாக தோற்றமளித்தல். 
  • DVT யால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? வெரிகோஸ் வெயின்ஸ் மற்றும் கோவிட்டால் உருவாக்கப்பட்ட இரத்த கட்டிகளுக்கு இடையே எந்தவித நிறுவப்பட்ட இணைப்பும் இல்லாத போதிலும், DVT அல்லது வெரிகோஸ் வெயின்ஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கோவிட்-19 நோய்த்தொற்றை தீவிரமானதாக கருதவேண்டும். அவர்கள் கோவிட்-19 தொடர்புடைய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்றவேண்டும் மற்றும் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

அவிஸ் வாஸ்குலர் மையத்தில் ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ்ஸிற்கான சிகிச்சை, இது முழு-சேவை வழங்கக்கூடிய வாஸ்குலார் சுகாதாரம் மற்றும் காயம் பராமரிப்பு மருத்துவமனை

DVT சிகிச்சையின் நோக்கமானது, இரத்தக்கட்டி பெரிதாவது மற்றும் நுரையீரலை நோக்கிப் பயணிப்பதைத் தடுப்பதாகும். நீங்கள் வாஸ்குலார் வல்லுநர்களை எதிர்நோக்குகிறீர்கள் எனில், அவிஸ் வாஸ்குலார் மையத்திற்கு வருகைதாருங்கள். எங்களது மையத்தில், எங்களது நோயாளிகளின் பாதுகாப்பே எங்களது முதல் முன்னுரிமை. வெரிகோஸ் வெயின்ஸ் மற்றும் DVT க்கு சிறந்த முறையில் நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதோடு, நோயாளிகளை நேரில் சந்திக்க நேருகையில் அனைத்துத் தேவையான முன்னெச்சரிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். ஒரே அமர்வில் அனைத்து சேதமடைந்த நரம்புகளையும் நீக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட லேசர் சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம்.