Book Appointment
X

Choose location for Appointment


“மறைந்திருக்கும்” வெரிகோஸ் வெயின்ஸ் நோயின் அபாயங்கள்

varicose veins treatment in chennai

நம்மில் பெரும்பாலானோர், வெரிகோஸ் வெயின்ஸை கால்களில் அல்லது பிற பகுதிகளில் காணப்படக்கூடிய வீங்கிய, முறுக்கப்பட்ட, நீலநிற நரம்புகளாக அடையாளம் காண்கிறோம். வெரிகோஸ் வெயின்ஸ் எப்போதுமே கண்களுக்கு புலப்படும் என உங்களுக்கு உறுதியாக தெரியுமா? உங்களால் காண முடியாத நிலையிலும் அவை தோன்றக்கூடுமா?

வெளியே தெரியாத நிலையில் இருக்கக்கூடிய வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படுவது சாத்தியமா?

இதற்கான பதில், ஆம். உங்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் இருந்து, அதை உங்களால் காண முடியாமல் இருக்கலாம்.

உலக மக்கள் தொகையில் 20 – 30% மக்கள் வெரிகோஸ் வெயின்ஸ் நோயினால் அவதியுறுகின்றனர். இதற்கு சமமான எண்ணிக்கையிலான வயதுவந்தோர் வெளியே தெரியாத வெரிகோஸ் வெயின்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு நீங்கள் பயப்படத் தேவையில்லை. உண்மையில், உங்கள் கால்களில் கண்ணுக்கு தெரியும் விதமாக இருக்கக்கூடிய நரம்புகள் வெரிகோஸ் வெயின்ஸின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இல்லை. இந்த அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் அவை உங்களுக்கு இருப்பதற்கான எச்சரிக்கையை வழங்குகின்றன. ஒருவேளை நீங்கள் அதுகுறித்து கவலைப்படும் பட்சத்தில், ஒரு நரம்பு நிபுணரிடம் உங்களை பரிசோதித்துக் கொண்டால், நீங்கள் குணமாகிடுவீர்கள். எனவே கண்களுக்கு புலப்படக்கூடிய வீங்கிய நரம்புகள் என்ற நிலையைக் கடந்து நரம்பு நோய்களுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் இருப்பதையும் கவனிக்க தொடங்குங்கள்.

கால்களின் ஆழமான நரம்புகளில் வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படும்போது, அவை தோலின் மேற்பரப்பில் தெரியாமல் இருக்லாம். இத்தகைய மறைந்துள்ள நரம்புகளும், பெரும்பாலும் தோலின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய நரம்புகளின் அதே அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

வெளியே தெரியாத வெரிகோஸ் வெயின்ஸின் அறிகுறிகள்

உங்கள் கால்களில் சிரைப் பற்றாக்குறை சிக்கல்கள் இருந்தும், அவை இயல்பாக இருப்பதைப் போல் தோற்றம் அளிக்கக்கூடும். எனினும், சில அறிகுறிகள் இருந்திடும். இவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அதிக ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

  • கால் வீக்கம் மற்றும் கனமான உணர்வு
  • தோல் பளபளப்பாகவும், மெல்லியதாகவும் மாறுதல், சில நேரங்களில் அடர்த்தியான, கிட்டத்தட்ட கன்றிப்போன காயம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்
  • உலர்ந்த மற்றும் அரிக்கக்கூடிய சருமம்
  • தோலில் இருக்கும் சங்கடமான புண்கள் மெதுவாக குணமடைதல்
  • தசைப்பிடிப்பு மற்றும் அசௌகரியம்
  • வலி மற்றும் ஓய்வற்ற கால்கள்.

வெளியே தெரியாத வெரிகோஸ் வெயின்ஸ் ஏன் ஆபத்தானவை?

வெரிகோஸ் வெயின்ஸ் பெரிய அளவிற்கு தீங்குவிளைவிப்பவை இல்லை என்றாலும், ஆழமான வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படக்கூடிய தளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இத்தகைய இரத்தக்கட்டிகள் உருவாகும் போது, அவை இரத்தத்தை தேங்கச் செய்து, இதன் மூலம் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதன்பால் உடலில், குறிப்பாக கால் பகுதிகளில் குளம் போல் இரத்தம் தேங்கிக் கொள்கிறது.

ஆழமான நரம்புகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கட்டிகள் அபாயமானவை. ஏனெனில் இவை இரத்த ஓட்டத்தில் கலந்து நுரையீரலை நோக்கி பயணம் செய்து, வாழ்வை அச்சுறுத்தக்கூடிய நிலையான – ‘நுரையீரல் தக்கையடைப்பு’ என்ற நோய்க்கான சாத்தியத்தை ஏற்படுத்துகிறது.

வெளியே தெரியாத வெரிகோஸ் வெயின்ஸை நோயறிதல்

நரம்பு சிக்கல்கள் இருப்பதைக் கண்டறிய, மருத்துவர்கள் பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேனைப் பரிந்துரைக்கிறார்கள்.

கண்களுக்கு புலப்படக்கூடிய வெரிகோஸ் வெயின்ஸ் என்பவை பெரிய சிக்கலுக்கான சிறிய அறிகுறி போன்றவை என வாஸ்குலார் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு வாஸ்குலார் சோனோகிராப்பரினால் மேற்கொள்ளப்படும் அல்ட்ராசவுண்ட்டின் மூலம் அனைத்தையும் சரிபார்த்து உறுதிசெய்து கொள்ள முடியும். குறிப்பாக, சருமத்தின் மேல்பரப்பிற்கு கீழே இருக்கக்கூடிய சிறிய நரம்புகள் எவ்வாறு ஆழமான நரம்புகளில் உள்ள பெரிய தவறுகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை அறிய முடியும்.

வெரிகோஸ் வெயின்ஸிற்குக் கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் யாவை?

அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் மற்றும் கட்டுகட்டுதல் போன்றவை நரம்பு பிரச்சனைகளுக்காக பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளாக தற்போது இருப்பதில்லை.

நவீன சிகிச்சைகள் பரவலாக, தெர்மல் (வெப்பத்தை கொண்டு செயல்படுத்தக் கூடியவை) மற்றும் நான்-தெர்மல் (ஸ்க்லரோசண்டுகள் மற்றும் பசை போன்ற இரசாயனங்களை உள்ளடக்கக் கூடியவை) என பிரிக்கப்பட்டுள்ளன. ஸ்கெலரோதெரபி, கதிரியக்க அதிர்வெண் நீக்கம், எண்டோவெனஸ் தெர்மல் அப்லேஷன் மற்றும் மருத்துவப் பசை சிகிச்சை போன்ற குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நரம்பு அகற்றுதல் செயல்முறையோடு ஒப்பிடுகையில் சிறந்த முடிவுகளைக் கொடுப்பதோடு, சிக்கல்கள் மற்றும் நோய் மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியங்களைக் குறைத்து, விரைவான குணமாதலை வழங்குகின்றன. முடிவாக, வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படுவதை நரம்பு நோய்க்கான தெளிவான அறிகுறியாக வாஸ்குலார் மருத்துவர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் இவை பெரிய சிக்கல்கள் மற்றும் அபாயங்களுக்கான ஒரு முன்னோடியாக இருப்பதனால், ஒரு போதும் இதை புறக்கணிக்கக் கூடாது.

Varicose Veins Treatment In Hyderabad | Bengaluru |Mysore Visakhapatnam | Vijayawada Chennai |Coimbatore Tirupati | Rajahmundry Kolkata | Madurai | Pondicherry | Delhi|

For Appointment Call

Telangana: 9989527715

Andhra Pradesh: 9989527715

Tamilnadu: 7847045678

Karnataka: 8088837000

Kolkata: 9154089451

Delhi : 9701688544

Branches

Home
Services
Doctors
Branches
Blog