அவிஸ் வாஸ்குலார் மையத்தில், வெரிகோஸ் வெயின்ஸ் சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளை எங்களது மருத்துவர்கள் காண்கையில், அந்நோயாளிகளுக்கு சிரைப் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் இருப்பதை அவர்கள் அடிக்கடி காண்கின்றனர். இதன் பொருள், வெரிகோஸ் வெயின்ஸ் வெறும் ஒப்பனை சிக்கலைக் காட்டிலும் தீவிரமானது மற்றும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால், இது ஆபத்தானதாகவும் மற்றும் பல தீவிரமான ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்திடும் என்பதாகும்.
நீங்கள் சிகிச்சை பெற முடிவு செய்ததும், உங்களில் எழக்கூடிய மிக முக்கியமான கேள்வியாக இருப்பது, எந்த சிகிச்சை முறை உங்களுக்கு சிறப்பாக பொருந்தும் என்பதே ஆகும்.
நரம்புகளுக்கான சிகிச்சை செயல்முறைகள், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில் நீண்ட பாதையை அடைந்துள்ளன. முன்னர், நோயாளிகளுக்கு இத்தகைய பல தேர்வுகள் இருக்கவில்லை, அவர்கள் பெரும்பாலும் மிகவும் ஆக்கிரமிப்பு மிகுந்த செயல்முறையாக அழைக்கப்படும் “நரம்பு அகற்றுதல்” செயல்முறைக்கே உட்படுத்தப்பட்டனர். இச்செயல்முறைக்கு மயக்க மருந்தும், நீண்ட குணமாதல் காலமும் தேவை. மேலும் இது மிகவும் வலி மிகுந்ததாகவும், பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் மிகுந்ததாகவும் இருந்தது. இச்சிகிச்சை முறையின் அதிகப்படியான ஆக்கிரமிப்புத் தன்மை மற்றும் அதிகரித்த அபாயங்கள் காரணமாக, முந்தைய சுகாதார நிலைகளுடன் கூடிய நோயாளிகள் இச்செயல்முறையிலிருந்து விலக்கப்பட்டனர். எனவே இதனோடு தொடர்புடைய துன்பங்களையும் தாங்க வேண்டியிருந்தது.
அதிர்ஷ்டவசமாக இப்போது நாம் அந்நிலையில் இல்லை! இன்று, அவிஸ் மருத்துவமனையில் நாங்கள், உங்களது நரம்பு தொடர்பான சிக்கல்களுக்கு மருத்துவப் பசை சிகிச்சை செயல்முறை உட்பட பல வரம்பிலான ஆக்கிரமிப்பு-அல்லாத சிகிச்சைகளை வழங்குகிறோம்.
உங்களது சுற்றோட்ட அமைப்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின், வெரிகோஸ் வெயின்ஸ் காணப்படுகிறது. பல்வேறு காரணங்களினால் உங்களது நரம்புகளில் உள்ள வால்வுகள் சேதமடைகையில், இரத்தம் இதயத்தை நோக்கி மேல் நோக்கி பாயத் தொடங்கி, உங்களது கீழ் முனைகளைச் சுற்றி ஒட்டிக்கொள்கிறது. காலப்போக்கில், நரம்புகள் விரியத் தொடங்கி, வீக்கமடைந்து, உங்களது தோலின் வழியாக காணப்படுகிறது.
மருத்துவப் பசை சிகிச்சை என்பது வெரிகோஸ் வெயின்ஸிற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய சமீபத்திய மற்றும் மிகவும் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம் ஆகும். இச்சிகிச்சை மட்டுமே நரம்புகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வெப்ப-மற்ற அமைப்பு என்பதனால், இச்செயல்முறை சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
பசை சிகிச்சை முறையானது, சேதமடைந்த நரம்புகளை மூடுவதற்கு ஒரு மருத்துவப் பிசினை பயன்படுத்துகிறது. இச்செயல்முறை பாதுகாப்பானது மற்றும் வித்தியாசமானது. ஏனெனில் இச்செயல்முறையின் போது அதிக அளவிலான மயக்கமருந்து தேவைப்படுவதோ அல்லது செயல்முறைக்கு தயாராக எந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமோ இல்லை.
மருத்துவப் பசை சிகிச்சை விளக்கப்படுகிறது
இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் அல்ட்ராசோனிக் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இச்செயல்முறையின் போது, உள்ளூர் மயக்க மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு, முழங்காலுக்கு அருகில் உள்ள தோல் மரத்துப் போக செய்யப்படுகிறது. ஒரு ஊசி நரம்பிற்குள் செலுத்தப்படுகிறது. இந்த ஊசியை தொடர்ந்து ஒரு ஒயர் அனுப்பப்பட்டு, அதன்பின் ஊசி வெளியே எடுக்கப்படுகிறது. இந்த ஒயரின் மூலமாக கேத்தெட்டார் நரம்புக்குள் அனுப்பப்படுகிறது. இறந்துபோன நரம்பிற்கு கேத்தெட்டாரிலிருந்து பசை (ஒரு மருத்துவப் பிசின்) செலுத்தப்பட்டு, அதன்பின் கேத்தெட்டார் வெளியே எடுக்கப்படுகிறது. சுமார் 30 நொடிகளுக்கு வெரிகோஸ் வெயின்ஸிற்கு மேலே உள்ள மேற்பரப்பு தோளில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சில நிமிடங்களுக்குள்ளாகவே நரம்பின் புறணியுடன் இப்பசை இணைந்து, அதன் மூலமாக செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது, எனவே இதன்பால் நரம்பு மூடப்படுகிறது. இப்போது, அடுத்த தொகுப்புப் பசை செலுத்தப்பட்டு, மீண்டும் கேத்தெட்டார் வெளியே எடுக்கப்பட்டு, அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
எத்தனை முறை பசை உள்ளே அனுப்பப்பட வேண்டும் என்பதும், இச்சிகிச்சைக்கான நேரமும், இறந்த நரம்பின் அளவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். சேதமடைந்த நரம்பின் வாயிலாக செல்லும் இரத்த ஓட்டம் தவிர்க்கப்படுவதனால், இறுதியில் வெரிகோஸ் வெயின்ஸ் மறைந்து போகிறது.
இச்சிகிச்சையின் செயல்திறன்
இச்சிகிச்சைமுறை, மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது, மேலும் சிரை ரிஃப்ளக்ஸ் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு தேர்வாக 2015 ஆம் ஆண்டு FDA வினால் அங்கீகரிக்கப்பட்டது.
சிகிச்சை அளிக்கப்பட்ட நரம்புகள் மூடப்பட்ட நிலையிலேயே பராமரிக்கப்படுவதால், இவ்வமைப்பு 95% பயன்மிக்கதாக இருப்பதாக பல ஆய்வுகள் காண்பிக்கின்றன.
அவிஸ் வாஸ்குலார் மையத்திலுள்ள எங்களது மருத்துவர்களுடன் பேசி, அனுகூலங்கள் மற்றும் சாத்தியமான அபாயங்கள் உட்பட பசை சிகிச்சை தொடர்பான மேலும் விவரங்களை கண்டறியுங்கள்.
Varicose Veins Treatment In Hyderabad | Bengaluru |Mysore | Visakhapatnam | Vijayawada | Chennai |Coimbatore | Tirupati | Rajahmundry | Kolkata | Madurai
For Appointment Call
Telangana: 9989527715
Andhra Pradesh: 9989527715
Tamilnadu: 7847045678
Karnataka: 8088837000
Kolkata: 9154089451