Book Appointment
X

Choose location for Appointment


நிணநீர் வீக்கம் உங்கள் வாழ்வை பாதிக்குமா?

varicose veins problems

நிணநீர் வீக்கம் என்பது ஒரு நாள்பட்ட நிலை ஆகும். இது ஒரு இயலாமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, பெரும்பாலான சூழல்களில், இது உங்களது வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து செய்வதிலிருந்து உங்களை தடுத்திடும். எனினும், இந்நிலை உங்களை மிகவும் பலவீனமடையச் செய்து, அதனால் நீங்கள் உங்களது வாழ்வின் பல அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்.

உலகளவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் இந்நோயினால் அவதியுறுகின்றனர் என மதிப்பீடுகள் எடுத்துரைக்கின்றன. இந்நோய் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என வகைப்படுத்தப்படுகிறது, இரண்டாம் நிலை நிணநீர் வீக்கம் என்பது மிகப் பொதுவான வகை ஆகும்.

நிணநீர் வீக்கம் என்பது புற்றுநோய் நோயாளிகளின் அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவற்றின் தீவிரமான மற்றும் பயங்கரமான பக்க விளைவுகளாக ஏற்படக்கூடியவை. புற்றுநோய் ஏற்படுவதே போதுமான அளவு சிரமத்தை ஏற்படுத்தக் கூடியது எனும் நிலையில், நிணநீர் வீக்கம் பொதுவாக இச்சிகிச்சைக்குப் பிறகான ஒன்று முதல் ஐந்து, அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஏற்படக்கூடும். மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்ற 40% பெண்களுக்கு, எதிர்காலத்தில் நிணநீர் வீக்கம் ஏற்பட்டு, அவர்களின் வாழ்க்கை தரத்தில் இது பயங்கரமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.

புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை அல்லது கீமோதெரபி சிகிச்சையின் போது, நிணநீர் முனைகள் அல்லது நிணநீர் நாளங்கள் பெரும்பாலும் சேதமடைகின்றன அல்லது நீக்கப்படுகின்றன.

அதிகபட்ச நிணநீர் திரவத்தினால் நிணநீர் வீக்கம் ஏற்படுகிறது. இது நாளங்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளின் அமைப்பாக இருக்கக்கூடிய நிணநீர் மண்டலத்தில் இத்தகைய அடைப்பின் விளைவாக ஏற்படுகின்றன.

நிணநீர் வீக்கம் என்றால் என்ன?

நிணநீர் என்பது புரதம், கொழுப்பு, குளுக்கோஸ், தண்ணீர், மற்றும் இரத்த அணுக்களின் துண்டுகளால் ஆனவை. இவை தொற்றை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களைக் கொண்டுள்ளன. நிணநீரில் பிளாஸ்மா புரத மூலக்கூறுகள் ஏராளமாக உள்ளன. இத்தகைய நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் இடையூறு, இந்த புரத மூலக்கூறுகளை வடிகட்டுவதை கடினமாக்குகின்றன.  இதனபால் நிணநீர் திரவம் மென்மையான திசுக்களில் வடிகையில், தோல், திசுக்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் என உடலின் எந்த இடத்திலும் வீக்கம் ஏற்படலாம், மிகப் பொதுவாக இவை கைகள் மற்றும் கால்களில் காணப்படுகின்றன.

இந்த வீக்கம் புரதம் நிறைந்ததாக இருப்பதால், அதில் பேக்டீரியாக்கள் உருவாகின்றன. எனவே, நிணநீர் வீக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் தோற்றுகளுக்கு ஆளாகக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

நிணநீர் வீக்கத்திற்கான நம்பகமான சுய-கண்டறிதல் அறிகுறி உள்ளதா?

ஆம், அது ஸ்டெம்மர் பரிசோதனை என்றழைக்கப்படுகிறது. நிணநீர் வீக்கம் இருப்பதை உறுதிசெய்வதற்கான முக்கிய விளைவாக இச்செயல்முறை உள்ளது.

இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

உங்கள் கால் விரலின் கீழுள்ள சருமத்தை கிள்ளிப் பார்க்கவும். அது கடினமாகவும் அல்லது சாத்தியமற்றதாகவும் இருக்கிறதா? இரண்டாவது கால் விரலின் அடிப்பாகத்தில் உள்ள தோலை மடிக்க முடியாமல் இருப்பது, நிணநீர் வீக்கம் இருப்பதற்கான பொதுவான நிலையாகும்.

நிணநீர் வீக்கம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது?

  1. ஆடை மற்றும் காலணி

நிணநீர் வீக்கம் கொண்ட நோயாளிகள், அவர்களுக்கு பொருத்தமான உடைகள் மற்றும் காலணிகளைக் கண்டறிவதில் சிரமப்படுகிறார்கள். அவர்கள் தங்களது ஆடைகள் மற்றும் காலணிகளைத் தேர்வு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களது நிணநீர் நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்குமாறு அவர்கள் அவற்றை தேர்வு செய்ய வேண்டும். இது திரவத்தேக்கம் ஏற்படுவதை தவிர்க்கும்.

சிலருக்கு ஒவ்வொரு காலிலும் வித்தியாசமான காலணிகளின் அளவு தேவைப்படுவதால், இவை தனிப்பயனாக்கப்பட வேண்டியிருக்கும். உங்களது சிகிச்சையாளரின் பரிந்துரையின் பேரில் நீங்கள் காலுறைகள், டைட்ஸ் அல்லது சுருக்க உள்ளாடைகளை அணிவது நல்லது.

  1. வானிலை

நிணநீர் நோயாளிகளுக்கு கோடை மற்றும் வெப்பமான நாட்கள் சவாலாக இருந்திடும்.

ஒரு வெப்பமான நாளில், இரத்தநாளங்கள் வெப்பத்திற்கு ஏற்ப விரிவடைந்து, இரத்த நாளங்கள் மற்றும் திசுக்களிலிருந்து வெளியேறக்கூடிய திரவத்தின் அளவை அதிகரிக்கின்றன. திறனற்ற நிணநீர் மண்டலத்துடன், இந்த கூடுதல் திரவம், முறையாக நிணநீர் மண்டலத்திற்கு திரும்பாமல், வீக்கம் மற்றும் எடிமா போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கின்றன.

அதிகப்படியான குளிர், அதிகப்படியான வெப்பம் போன்ற நிலைகளும், நிணநீர் வீக்கத்திற்கான அறிகுறிகளை மோசமாக்கிடும். ஒருபோதும் உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது, இது இந்நோயின் நிலையை மோசமாக்கிடும். வீட்டிற்குள்ளேயே இருப்பது மற்றும் செயல்பாடற்ற நிலையில் இருப்பது போன்றவை நிணநீர் வீக்கத்தின் அறிகுறிகளை மோசமாக்கிடும். குளிர்ந்த வானிலை உங்களது சருமத்தை உலரச் செய்து அரிப்பை ஏற்படுத்துவதால், ஈரப்பதம் இல்லாத தன்மையின் காரணமாக சருமத்தில் இரத்தக் கசிவு அல்லது பிளவுகளை ஏற்படுத்தும்.

  1. உணர்வு ரீதியான விஷயங்கள்

நிணநீர் வீக்கம் கொண்ட நோயாளிகளுக்கு, அவர்களது நிலை குறித்து வருத்தம் ஏற்படுவது மிகவும் இயல்பானது. உங்களுக்கு எதிர்மறையான உணர்வுகளும், எண்ணங்களும் ஏற்படக்கூடும். மேலும் உங்களது தோற்றம் உங்களது எதிர்மறை எண்ணத்தை அதிகப்படுத்துவதாக நீங்கள் எண்ணினால், உங்களது சிகிச்சையாளரிடம் இது குறித்து நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். அவர் உங்களுக்கு ஆலோசனை அமர்வுகளை வழங்குவார்.

நிணநீர் வீக்கத்திற்கான மாற்று சிகிச்சைகள்

நிணநீர் வீக்கத்திற்கான நிலையான சமகால சிகிச்சைகளான, நிணநீர் வடிகால், சுருக்க ஆடைகள் அணிதல், உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை போன்றவை பயனுள்ளவையாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவற்றின் விளைவுகள் குறுகிய-காலம் மட்டுமே என்பதால் நிணநீர் வீக்கம் மீண்டும் ஏற்படுவது இயல்பானது.

Varicose Veins Treatment In Hyderabad | Bengaluru |Mysore Visakhapatnam | Vijayawada Chennai |Coimbatore Tirupati | Rajahmundry Kolkata | Madurai | Pondicherry | Delhi|

For Appointment Call

Telangana: 9989527715

Andhra Pradesh: 9989527715

Tamilnadu: 7847045678

Karnataka: 8088837000

Kolkata: 9154089451

Delhi : 9701688544

Branches

Home
Services
Doctors
Branches
Blog