Book Appointment
X

Choose location for Appointment


சிரைக் கோளாறுகள் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்கெலரோதெரபி செயல்முறை பரிந்துரைக்கப்படலாமா?

Sclerotherapy procedure patients with venous problems?

நீரிழிவு நோயுடன் தொடர்புடைய உயர் இரத்த சர்க்கரை அளவுகள், இரத்த நாளங்களில் கொழுப்புப் படிதலை ஏற்படுத்தி, அதன் மூலம் உங்களை சிரைக் கோளாறுகளால் பாதிப்படையச் செய்யக்கூடும். இரத்த நாளங்களின் புறணி பாதிக்கப்படுவதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். உங்களது பாதம், கைகள், மற்றும் குறிப்பாக கால்களில் மோசமான இரத்த ஓட்டம் இருப்பது, ஒருவரின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முனைகளில் உள்ள நரம்புகள் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு எடுத்துச் செல்ல போராடுகின்றன. இது, நரம்புகளை சுற்றிலும் இரத்தத்தை குளம் போல் தேங்கச் செய்து, அவற்றை நீட்டித்து, இறுதியாக நரம்புகளை வலுவிழக்கச் செய்து, நரம்புக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.

உங்களது இரத்த ஓட்ட அமைப்பு சமரசம் செய்யப்படும்போது, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது எப்போதும் எளிதல்ல. ஏற்படவிருக்கும் பெரிய சிக்கல்களை தவிர்க்க, எதை கவனிக்க வேண்டும் மற்றும் எவ்வகையான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம். ஒரு நரம்பு மருத்துவர், நரம்பு கோளாறுகளின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு, சரியான தலையீடுகளை பரிந்துரைப்பார். குறிப்பாக, ஒரு நீரிழிவு நோயாளிக்கு நரம்பு மருத்துவர் இன்றியமையாதவராகிறார்.

வெரிகோஸ் வெயின்ஸ்

நீரழிவு நோய், வெரிகோஸ் வெய்ன்ஸை ஏற்படுத்துவதில்லை. எனினும், மறைமுகமாக அவற்றின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கக்கூடும். வெரிகோஸ் வெய்ன்ஸ் மற்றும் சிலந்தி நரம்புகள் சிக்கலான நிலைகள் ஆகும். இவை, வயது, மரபியல், மற்றும் ஹார்மோன் நிலை மாற்றங்கள் உட்பட பல்வேறு இடர் காரணிகளுடன் தோன்றுகின்றன. கட்டுப்பாடற்ற நீரழிவு மற்றும் வெரிகோஸ் வெயின்ஸின் இந்த கலவை, இரத்தக் கட்டிகளை உருவாக்கக்கூடும். இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக சதவிகித மக்கள், இறுதியில் இரத்த உறைவு-தொடர்பான நிலைமைகளுக்கு ஆளாகிறார்கள் என அறியப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலானோர் நாள்பட்ட சிரைப் பற்றாக்குறைகளுக்கு ஆளாகி, அதன் மூலம் அவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படாத வெரிகோஸ் வெயின்ஸ், தீவிரமான வலியை ஏற்படுத்தும்.  நீரிழிவு நோயாளிகளில், சிரை அல்சர் எனப்படும் கால் புண்கள் தோன்றும் போது, அவை பொதுவாக குணமாகாமல் இருப்பதற்கும், அதன் மூலம் தொற்று ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. 

நீரழிவு நோய் மற்றும் நரம்புக் கோளாறுகள் ஒரு மோசமான சுழற்சி

நீரழிவு நோயின் காரணமாக, நரம்பின் ஆரோக்கியம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இவை பின்னர் கால் வலி, வீக்கம், மற்றும் தோலில் நிறமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, நோயாளிகளின் அதிக செயல்பாடற்ற நிலைக்கு வழிவகுக்கிறது. இதன்பால் நீரிழிவு நோயின் அறிகுறிகளை மேலும் மோசமாக்க பங்களிக்கின்றன. இந்த சுழற்சி வடிவம் அபாயகரமானது, எனவே உங்களது நீரழிவு நோய் மற்றும் சிரை நோய் ஆகிய இரண்டையும் ஒன்றாக நிர்வகிக்க, மருத்துவர்களிடம் சிகிச்சையை நாடுவது மிகவும் முக்கியமாகும்.

நீரிழிவு நோயாளிகளில் குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட “ஸ்கெலரோதெரபி”

நீரழிவு நோய் கொண்ட நோயாளிகளுக்கு, சிரைக் கோளாறுகளுக்கான சிகிச்சையை ஆரம்பத்திலேயே வழங்க பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆரம்ப தலையீட்டு சிகிச்சை, கூடுதலாக நரம்பு மற்றும் தோலில் ஏற்படும் சேதத்தின் அபாயத்தை குறைக்கிறது, ஏனெனில் இவை காலப்போக்கில் மிகவும் மோசம் அடையக்கூடும். ஆபத்தான அறிகுறிகள் காணப்பட்டால், காத்திருப்பு-மற்றும்-கண்காணிப்பு அணுகுமுறையை கடைபிடிக்காமல், உடனடியாக சிகிச்சையை தொடங்குவது நல்லது.

சமீபகாலமாக, ஸ்கெலரோதெரபி என்றழைக்கப்படும் ஒரு சிகிச்சைமுறை, அதிக பயன்மிக்கதாகவும் மற்றும் வெரிகோஸ் வெயின்ஸிற்கான பாதுகாப்பான சிகிச்சையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர், தங்களது இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருக்கும் நீரழிவு நோயாளிகளின் வெரிகோஸ் வெயின்ஸ் சிகிச்சைக்கு, ஒரு பயன்மிக்க மற்றும் நன்கு தாக்குப்பிடிக்கக் கூடிய செயல்முறையாக, ஸ்கெலரோதெரபி இருப்பது தெரிகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளின் வெற்றி விகிதம், ஸ்கெலரோதெரபிக்கு உட்பட்ட நோயாளிகளின் உலகளாவிய எண்ணிக்கையுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

அவிஸ் வாஸ்குலார் மையத்தில், டாக்டர். ராஜா மற்றும் அவரது சிறந்த மருத்துவர்கள் குழு, நரம்புக் கோளாறுகள் மற்றும் நீரழிவு நோய் போன்ற இரத்த ஓட்டம் தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். உங்களது குறிப்பிட்ட நிலையின் அடிப்படையில், உங்களுக்கு ஸ்கெலரோதெரபி போன்ற குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட செயல்முறைகள் பொருந்துமா என அவர்கள் பரிந்துரைப்பார்கள். 

Varicose Veins Treatment in Chennai Coimbatore | Hyderabad | Tirupati | Rajahmundry Kolkata | Madurai | Bengaluru |Mysore Visakhapatnam | Vijayawada 

For Appointment Call

Tamilnadu: 7847045678

Telangana: 9989527715

Andhra Pradesh: 9989527715

Karnataka: 8088837000

Kolkata: 9154089451

Branches

Home
Services
Doctors
Branches
Blog