Book Appointment
X

Choose location for Appointment


கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் செய்துகொள்ள நீங்கள் பொருத்தமானவரா?

గర్భాశయ కణితుల ఎంబోలైజేషన్

கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு, உங்களது மொத்த கருப்பையை நீக்குவது மட்டுமே ஒரே சிகிச்சை என்றிருந்த நாட்கள் கடந்து விட்டன. தற்போது சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், பல்வேறு குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட சிகிச்சை தேர்வுகள் கிடைக்கின்றன. இவை நார்த்திசுக்கட்டிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கும் அதே வேளையில், உங்களது கருப்பையையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன.

பெரும்பாலான நார்த்திசுக்கட்டிகள் தீங்கற்றவை, மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல்-இல்லாதவை. எனவே இவை உங்களுக்கு இருப்பதாக அறியப்பட்டால், நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கிடைக்கப்பெறும் பல்வேறு சிகிச்சை மாற்றுக்களுடன் இதனை திறம்பட நிர்வகிக்க முடியும். கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் என்றழைக்கப்படும் இந்த நவீன குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட செயல்முறை, அதன் அனுகூலங்கள் மற்றும் அதன் ஆபத்துகளைக் குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.

கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்றால் என்ன?

உங்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருப்பதாக கண்டறியப்பட்டால், இவை பெண்களில் அவர்களது இனப்பெருக்க காலங்களில் அதிகமாக தோன்றுவதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 70% பெண்களில், அவர்களது வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இதனைப் பெற வாய்ப்புள்ளது என ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. இதில் முக்கியமானது என்னவெனில், இந்நிலை, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை தேர்வுகள் குறித்த உங்களது விழிப்புணர்வே ஆகும்.

கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகள்

நார்த்திசுக்கட்டிகள் கொண்ட பெண்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் இல்லாதவர்களாக இருக்கின்றனர். நிபுணர் மருத்துவர்களை பொருத்தவரை, நார்த்திசுக்கட்டிகள் பெரிதாகாமல், உங்களுக்கு அறிகுறி இல்லாமல் நீங்கள் விழிப்புடன் இருக்கும் பட்சத்தில், அவ்வப்போதான ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளே போதுமானது, உடனடி சிகிச்சை தேவைப்படாது என்கின்றனர்.

பெரும்பாலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் முதல் அறிகுறியாக எப்போதும் இருப்பது, அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு. பல பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டு, பலவீனமடைந்து, அவர்களது நிலைக்காக மருத்துவரை நாடுவர். அவ்வப்போது பெண்கள் மாதவிடாய்க்கு இடையில் தங்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை குறித்து புகார் கூறுகின்றனர். எனினும், அதிகப்படியான இரத்தப்போக்கு என்பது கருப்பை பாலிப்கள் போன்ற சில பிற நிலைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் அல்லது ஹார்மோன் சமநிலையற்ற தன்மையினாலும் ஏற்படலாம்.

உங்களது நார்த்திசுக்கட்டியின் அறிகுறிகள், நார்த்திசுக்கட்டியின் அளவு, அவற்றின் எண்ணிக்கை, மற்றும் அது அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது. அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லாமல், இடுப்பில் அழுத்தம், உடலில் வலி, முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மற்றும் மலச்சிக்கல் ஆகியவையும் நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகளாக இருந்திடும். பெரிய நார்த்திசுக்கட்டிகள் கொண்ட பல பெண்களுக்கு, அவர்களது கருப்பை அதன் இயல்பான அளவிலிருந்து பல மடங்கு பெரிதாக இருந்திடும். இத்தகைய பெரிதான கருப்பையைக் கொண்டிருக்கும் காரணத்தினால், அப்பெண்மணி கருவுற்றிருப்பதை போன்ற “பருமனான” தோற்றத்தை கொண்டிருப்பார்.

கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கான சிகிச்சை மாற்றுக்கள்

நார்த்திசுக்கட்டிகளுக்கான உங்கள் தெரிவு மற்றும் சிகிச்சைத் தேர்வுகள் உங்களது அறிகுறிகளின் அடிப்படையில் அமைகின்றன. ஒரு நார்த்திசுக்கட்டிக்கான சிகிச்சையை தேர்வு செய்கையில், எதிர்காலத்தில் கர்ப்பத்திற்கான நோயாளியின் விருப்பத்தைக் கருத்தில் கொள்ளவேண்டியது உங்களது மருத்துவரின் முக்கிய அம்சமாகும்,.

அறுவைசிகிச்சையின் மூலமாக மொத்த கருப்பையும் நீக்கக்கூடிய கருப்பை நீக்கம் போலல்லாமல், நீங்கள் எதிர்காலத்தில் கருவுறுவதற்கு அனுமதிக்கக் கூடிய பல்வேறு பிற கருப்பை நார்த்திசுக்கட்டி சிகிச்சைகளும் உள்ளன. கருப்பை நீக்கம், இக்காலங்களில், மிகப்பெரிய நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இறுதி மாதவிடாயை எதிர்நோக்கும் அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு கடுமையான இரத்தப்போக்கு கொண்ட பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு 100% நார்த்திசுக்கட்டிகள் மீண்டும் தோன்றாது என உறுதியளிக்கப்படுகிறது.

கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் – அனுகூலங்கள் மற்றும் இடர்கள்

நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் செயல்முறையானது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரத்த ஓட்டத்தை செலுத்தக்கூடிய குறிப்பிட்ட தமனிகளை தடுக்கிறது. எனவே இரத்தத்திலுள்ள நார்த்திசுக்கட்டிகள் அவை வளர்வதற்கான ஊட்டச்சத்து இல்லாமல் “பட்டினி” அடைகின்றன. இரத்த ஓட்டம் நடத்தப்படும் போது, கட்டிகள் இறந்து, வடுத் திசுக்களாக உருவாகி, நார்த்திசுக்கட்டிகள் பின்னர் அவற்றின் அளவில் சுருங்குகின்றன.

நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷனின் அனுகூலங்கள்

அதிகப்படியான இரத்தப்போக்கு, வலி, மற்றும் சிறுநீர்ப்பை அல்லது இடுப்பில் அழுத்தத்தை உணரக்கூடியவர்களுக்காக இச்செயல்முறை பரிந்துரைக்கப்படுகிறது. பிற அறுவைசிகிச்சை செயல்முறைகளோடு ஒப்பிடுகையில், இது, அதே ஒத்த விளைவுகளை வழங்கக்கூடிய ஒரு குறைந்தபட்ச ஆக்கிரமிப்புக் கொண்ட செயல்முறையாகும். இச்செயல்முறைக்கான பிற அனுகூலங்கள் பின்வருமாறு:

  • கருப்பை, ஓவரிக்கள், மற்றும் கருப்பை வாய் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன – கருவுறத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு மகத்தான நிவாரணம்
  • ஆக்கிரமிப்பு-அல்லாத தன்மையினால் இரத்த இழப்பு இருக்காது
  • கவனிக்கக்கூடிய அளவிற்கான தழும்புகள் இருக்காது
  • இயல்பான செயல்முறைகளுக்கு விரைவில் திரும்ப முடியும்
  • குறைந்தபட்ச மருத்துவமனை தங்கலுடன் வெளிநோயாளி செயல்முறை
  • அதிகப்படியான இரத்தப்போக்கு, இடுப்பில் அழுத்தம்/வலி போன்ற அறிகுறிகள் குறைக்கப்படுகின்றன
  • சிறந்த வாழ்க்கைத்தரம்

செயல்முறையின் இடர்கள்

செயல்முறைக்கு பிறகு பெரிய சிக்கல்கள் மிக அரிதாகவே ஏற்படுகின்றன. செயல்முறை அபாயங்கள் அறுவைசிகிச்சை செயல்முறைகளை போன்றே இருக்கும்.

எந்த பிற சிகிச்சை முறையுடனும் அப்பகுதியில் உள்ள இரத்த நாளங்களுக்கு சேதம் அல்லது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அனுபவம் வாய்ந்த கதிரியக்கவியலாளரால் செயல்படுத்தப்படுகையில், இந்த ஆபத்து மிகவும் குறைவு.

சில நோயாளிகளில் மாறுபட்ட சாயத்தினால் ஒவ்வாமை எதிர்வினை ஏற்படக்கூடும்.

இச்செயல்முறை, எதிர்கால கர்ப்பத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எம்போலைசேஷன் செயல்முறை, சிகிச்சைக்கான செலவுகள் மற்றும் மீட்பு நேரம் ஆகியவற்றை குறித்து மேலும் அறிந்து கொள்ள, அவிஸ் வாஸ்குலார் மையத்தை தொடர்பு கொள்ளவும். மேலும் எங்களது நிபுணர் தலையீட்டு கதிரியக்கவியலாளர்களை சந்திக்கவும்.

Uterine Fibroid Embolization Treatment in Hyderabad | Chennai 

For Appointments Call:

Hyderabad: 9989527715

Chennai: 7847045678

Branches

Home
Services
Doctors
Branches
Blog