https://annesha-style.com/cara-cepat-menang-game-slot-gacor-2022/

https://www.clearskypromotions.com/situs-judi-slot-online-terpercaya-2022/

https://1new88.com/nama-nama-situs-judi-slot-online-terlengkap/

https://langdaninhvan.com/situs-judi-slot-resmi-terlengkap-2022/

https://maturazam.com/judi-slot-online-bet-murah-terbaik-2022/

https://matarz.com/profit-daftar-di-situs-judi-slot-online/

https://jungleeats.com/link-slot-online-gampang-menang-bonus/

https://dekorstyling.com/situs-judi-online24jam-terpercaya/

https://www.vanphongphamhcm.vn/situs-judi-slot-online-gampang-menang-2022-terbaik/

https://argoodsbd.com/2022/04/17/situs-judi-slot-sering-kasih-menang-resmi/

https://blogartma.com/daftar-situs-judi-slot-online-terbaru/

https://www.kingsmedicalcenter.ae/situs-judi-slot-gacor-bonus-terbesar/

https://eric411.com/daftar-10-situs-judi-slot-terbaik-dan-terpercaya-no-1-di-indonesia/

https://www.romaedintorninotizie.it/notizie-dalla-rete/slot-gacor-hari-ini-terpercaya/

https://crytunes.co/2022/04/17/slot-online-gacor-gampang-menang-2022/

https://www.expocook.org/2022/04/17/situs-judi-slot-online-terbaru-dan-terbaik/

https://fantasypipeline.com/community/profile/obfowuyj/

https://benzocure.org/community/profile/obfowuyj/

https://secretsmassage.ca/community/profile/obfowuyj/

https://www.cybersam.info/community/profile/obfowuyj/

உங்கள் கால் நரம்புகள் தாக்குதலுக்குள்ளாகும் போது-Blog |Avis Book Appointment
X

Choose location for Appointment


உங்கள் கால் நரம்புகள் தாக்குதலுக்குள்ளாகும் போது

varicose veins reasons

சிலந்தி நரம்புகள் என்றால் என்ன?

சிலந்தி நரம்புகள் என்பவை சிவந்த, பழுப்பு நிறமுடைய, அல்லது நீல நிறமான மெல்லிய நரம்புகள் ஆகும். இவை 1 முதல் 1.5 மில்லி மீட்டர் அளவுடனும், வெரிகோஸ் வெயின்ஸைக் காட்டிலும் மிகவும் சிறிதாகவும் இருந்திடும். பெரும்பாலும் கால்கள், தொடை, கணுக்கால் அல்லது முகத்தில், சிவப்புநிற கோடுகளாலான கிளைகள் போன்று தோற்றம் அளிப்பவையாகவும், அடிக்கடி சிலந்தி வலைகளை ஒத்தவையாகவும் இருக்கும். இவை வலி மற்றும் அறிகுறிகள் இல்லாதவையாக இருந்தபோதிலும், இது ஒரு ஒப்பனை தொல்லையாகும். குறிப்பாக உங்கள் கால்களில் இந்த அசாதாரணமான நரம்புகள் இருக்கும்பட்சத்தில், அசௌகரியங்கள் அதிகம். 

சிலந்தி நரம்புகளுக்கு சிகிச்சை தேவையா?

பொதுவாகவே, சிலந்தி நரம்புகள் எந்தவித நேரடியான ஆரோக்கிய அபாயத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனினும், சில தீவிரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதனால் இவை தோன்றிய உடனேயே சரி பார்க்கப்பட வேண்டும். உங்களுக்கு சிலந்தி நரம்புகள் இருக்கும் பட்சத்தில், வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெரிகோஸ் வெயின்ஸ், பொதுவாக சிவப்பு நிறத்திலும் மற்றும் முறுக்கப்பட்ட, முரட்டுத்தனமான, ஆழமான மற்றும் சிலந்தி நரம்புகளை காட்டிலும் பெரிதாகவும் இருக்கின்றன.

வலி அல்லது அறிகுறிகள் இல்லாதிருப்பது நீங்கள் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பதைத் தடுக்காது. இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பழுதடையும் போது சிலந்தி நரம்புகள் உருவாகின்றன. இரத்த நாளங்கள் இதயத்திற்கு மீண்டும் இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. இரத்தம் பின்னோக்கி பாய்வதிலிருந்து தடுக்க, அவை ஒரு-வழி வால்வை கொண்டுள்ளன. இவை இரத்தம் அதனூடாக சென்றதும் மூடிக்கொள்ளும்.

இந்த வால்வு பலவீனமடைந்து அல்லது சேதமடைந்து போகையில், இரத்தம் சரியான திசையில் செல்லப் போராடுகிறது. இதன்விளைவாக குளம் போல் தேங்கத் தொடங்குகிறது. காலப்போக்கில், இது சிலந்தி நரம்புகளை ஏற்படுத்தி, கிளைகளாக வெளியே தோன்றக்கூடிய இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

நரம்பு சிக்கல்கள் குறித்து ஆரம்ப நிலையிலேயே அறிந்துகொள்வது, வெரிகோஸ் வெயின்ஸ், தொற்றுக்கள், சீழ்வடியும் புண்கள், மற்றும் இரத்த ஓட்ட சிக்கல்கள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நோயை தடுத்திடும்.

சிலந்தி நரம்புகள் உங்கள் ஆரோக்கியத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?நீரிழிவு நோய் போன்ற பிற நிலைகளுடன் உங்களுக்கு சிலந்தி நரம்புகளும் இருக்கும் பட்சத்தில், இரத்த உறைவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகிறது. ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் (DVT) என்பது கால் அல்லது கைகள், மூளை, அல்லது உடலின் பிற பெரிய நரம்புகள் போன்றவற்றின் முக்கிய இரத்த நாளத்தில் இரத்த உறைவு ஏற்படும் போது உருவாகும் நிலையாகும். ஒரு இரத்த நாளத்தில் ஏற்படும் இரத்த உறைவு எப்போதாவது அதன் ஆரம்பத்திலிருந்து பிரிந்து, இதயத்தின் வாயிலாக நுரையீரலுக்கு பயணிக்கையில், போதுமான இரத்த ஓட்டத்தை தடுக்கக் கூடும். இந்நிலை நுரையீரலின் பல்மனரி எம்போலிஸம் (PE) என்றழைக்கப்படுகிறது, இது முற்றிலும் அபாயகரமானது.

சிலந்தி நரம்புகளுக்கான மாற்று சிகிச்சைகள்

தற்போது, சிலந்தி நரம்புகளுக்கான பல்வேறு சிகிச்சை தேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன. 

  • சுருக்க சாக்ஸுகள் மற்றும் காலுறைகள்

உங்கள் நிலைக்கு ஆதரவளிக்கக்கூடிய உள்ளாடைகள் மற்றும் சுருக்கக் காலுறைகளை அணிந்து கொள்வது, பாதம், காலின் பின் பகுதி, மற்றும் கணுக்கால்களில் அழுத்தத்தைக் கொடுத்து, வீக்கம் மற்றும் கால்களில் இரத்த உறைவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை குறைக்க உதவுகிறது. 

  • சிலந்தி நரம்புகளுக்கான ஸ்கெலரோதெரபி

பாதிக்கப்பட்ட நரம்புகளை இறுதியாக சுருங்கச் செய்து மறையச் செய்யும் விதமாக, இச்செயல்முறை ஸ்க்லரோஸிங் ஏஜெண்டை அவற்றில் நேரடியாக ஊசி மூலம் செலுத்துகிறது.

இந்த சிகிச்சை அமர்வுக்கான காலஅளவு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இரத்த நாளங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. முழுமையான குணமாதலுக்கு கூடுதல் அமர்வுகள் தேவையா என்பதை முடிவுகளின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் முடிவு செய்வார். இச்செயல்முறை முடிவுகள் அற்புதமாகவும், அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடக்கூடியதாகவும், மிகக் குறைந்த சிக்கல்கள் கொண்டவையாகவும் இருந்திடும்.  

  • எண்டோவெனஸ் லேசர் சிகிச்சை (EVLT)

EVLT என்பது சிலந்தி நரம்புகள் மற்றும் சிறிய வெரிகோஸ் வெயின்ஸிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சமகால நடைமுறை ஆகும். இவை வெரிகோஸ் வெயின்ஸிற்கு வழிவகுக்கும் அசாதாரண இரத்த நாளங்களை எரிக்க, கதிரியக்கஅதிர்வெண் அல்லது லேசர் ஆற்றலை பயன்படுத்தக்கூடிய, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட செயல்முறை.

அவிஸ் வாஸ்குலார் மையத்தில், ஒரு விரிவான அல்ட்ராசவுண்ட் துல்லியமான நோயறிதலை வழங்குகிறது. உங்களது குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தனிப்பட்ட சிகிச்சை திட்டம் உருவாக்கப்படுகிறது. அவிஸில் உள்ள எங்கள் மருத்துவர்கள், முற்போக்கான நரம்பு நிலைகளைத் தடுக்க உதவும் முறையான பாலோ அப் வருகைகள் மற்றும் சிகிச்சைக்குப் பிறகான வழிமுறைகளில் இணக்கத்தை வலியுறுத்துகின்றனர்.

Varicose Veins Treatment In Hyderabad | Bengaluru |Mysore Visakhapatnam | Vijayawada Chennai |Coimbatore Tirupati | Rajahmundry Kolkata | Madurai

For Appointment Call

Telangana: 9989527715

Andhra Pradesh: 9989527715

Tamilnadu: 7847045678

Karnataka: 8088837000

Kolkata: 9154089451

Branches

Home
Services
Doctors
Branches
Blog