Book Appointment
X

Choose location for Appointment


உங்கள் காலின் வலி உங்களது நரம்புகளினால் ஏற்படுத்தப்படுகிறதா?

அதிக அழுத்தம் மற்றும் உழைப்பு உங்களது கால்களில் வலியை ஏற்படுத்தக்கூடும். அவ்வப்போது, உங்களது சுற்றோட்ட அமைப்பில் உள்ள சிக்கல்களினாலும் கால்வலி ஏற்படலாம். முறையான மருத்துவ கவனிப்பு தேவைப்படக்கூடிய வலியை வேறுபடுத்திக் காட்ட இந்த பிளாக் உதவிடும்.

நாம் வளர வளர, இரத்த நாளங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய சிக்கல்கள் பொதுவாகவே அதிகரிக்கின்றன. அவை தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்துவதை தவிர்க்கும் வண்ணம் சரியான நேரத்தில் கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

நாள்பட்ட கால் வலியை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் மற்றும் அதற்கான காரணங்களை குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். 

  1. வெரிகோஸ் வெயின்ஸ்

வெரிகோஸ் வெயின்ஸ் என்பது கால்களில் விரிவடையக்கூடிய முறுக்கப்பட்ட, ஊதா-நிற நரம்புகள் ஆகும். இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய நமது நரம்புகளுக்கு உள்ளே இருக்கும் ஒரு-வழி வால்வுகள் சேதமடையும் போது, இந்நிலை உருவாகிறது. இதனால் உங்களது கால்களில் தீவிர வலியின் தாக்குதல்கள், தசைபிடிப்பு அல்லது எரிச்சலான உணர்வுகளை நீங்கள் உணரக்கூடும்.

இந்நிலையை புறக்கணித்தால், தன்னிச்சையான இரத்தக்கசிவு, DVT, சிரை அல்சர்கள் அல்லது சிரை அரிக்கும் தோலழற்சி, ஒரு வகையான தோல் தொற்று போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

  1. ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT)

ஆழமான நரம்பு இரத்த உறைவு என்பது ஆழமான நரம்பில், பொதுவாக கால்களில் ஏற்படக்கூடிய இரத்தக்கட்டி. இந்த இரத்தக் கட்டிகள் இரத்த நாளத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை பகுதியாக அல்லது முழுமையாக தடுத்திடும். மேலும் மேலோட்டமான நரம்புகள் அல்லது ஆழமான நரம்புகளில் ஏற்படக்கூடிய இத்தகைய கட்டிகள் பின்னர் மேலும் தீவிரமடைந்து, உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படக்கூடிய நிலைக்கும் சென்றிடும். 

இரத்தக் கட்டிகள் எவ்வாறு உருவாகின்றன

  • பக்கவாதத்துடன் தொடர்புடைய வரையறுக்கப்பட்ட இயக்கத்தின் காரணமாக ஏற்படும் மெதுவான இரத்த ஓட்டம் அல்லது படுக்கையிலேயே இருக்க வேண்டிய மருத்துவ நிலைகள் போன்றவற்றில் இரத்தக் கட்டிகள் உருவாகிடும்
  • அறுவைசிகிச்சை, தசைக் காயம் அல்லது எலும்பு முறிவுகள் காரணமாக இரத்த நாளங்களில் ஏற்படும் சேதம், இரத்தக் கட்டியை உருவாக்கிடும்
  • புற்றுநோய் மற்றும் தொடர்புடைய சிகிச்சைகள், சில பிற நாள்பட்ட நோய் ஆகியவை இரத்தக் கட்டிகளை உருவாக்கிடும்
  • கர்பத்தினால் ஏற்படும் அதிகபட்ச ஈஸ்ட்ரோஜென் அளவு அல்லது இரத்த கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது பரம்பரையான உறைதல் கோளாறுகள்

கால் வலியுடன் சேர்த்து, தோல் நிறமாற்றம், கால் தசை பிடிப்புகள் மற்றும் வீக்கம் ஆகியவற்றால் DVT வகைப்படுத்தப்படுகிறது.

  1. புற தமனி நோய் (PAD) 

புற தமனி நோய் (PAD) அல்லது புற வாஸ்குலார் நோய் என்பது கால்கள் மற்றும் கைகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய தமனிகளில் ஏற்படும் கோளாறு ஆகும். பிளேக் டெபாசிட்டுகள், குறுகலான, கடினமான, மற்றும் தடை செய்யப்பட்ட தமனிகளை ஏற்படுத்துகிறது, இந்நிலை ஆத்தரோஸ்க்லரோசிஸ் என்றழைக்கப்படுகிறது. போதுமான இரத்த ஓட்டம் இல்லாமை, குறைபாடுள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை உருவாக்குகிறது, மேலும் PAD என்பது ஒரு அதிகரிக்கக்கூடிய நோய் ஆகும்.

PAD ன் முக்கிய அறிகுறியாக இருப்பது, நொண்டுதல் ஆகும். கால்களில் முறையற்ற இரத்த ஓட்டத்தினால் இது ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் எரிச்சல் உணர்வு அல்லது மரத்துப்போதல், பலவீனம் அல்லது கால்களில் நிற மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

இதன் அறிகுறிகளாக, வெளிறிப் போன தோற்றமளிக்கும் குளிர்ந்த அல்லது மரத்துப்போன விரல்களும் உள்ளடங்குகிறது. உங்களது கைகள் மற்றும் கால்களில் புண்கள் தோன்றிடும், மேலும் அவை எளிதில் குணமாகாது.

  1. நாள்பட்ட சிரை பற்றாக்குறை (CVI)

நமது கால்களில் உள்ள நரம்புகள் மற்றும் அவற்றில் உள்ள வால்வுகள் முறையாக செயல்படாத போது, புவியீர்ப்புக்கு எதிராக போராட முடியாமல், இரத்தம் இதயத்தின் திசையை நோக்கி பாயத் தொடங்குகிறது. இவ்வாறு நடந்தால், இரத்தம் பின்னோக்கி பாயத் தொடங்கி, உங்களது கால்களில் உள்ள நரம்புகளைச் சுற்றி குளம் போல் தேங்கத் தொடங்கிடும். இந்நிலை நாள்பட்ட சிரைப் பற்றாக்குறை என்றழைக்கப்படுகிறது.

இந்நிலை, அரிப்புடன் கூடிய மிகுந்த வலியுள்ள கால்களால் வகைப்படுத்தப்படுகிறது. இந்நிலை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கால் அல்சர்கள், மற்றும் தீவிரமான தசைப்பிடிப்புகள் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

இன்று, நரம்பு தொடர்பான சிக்கல்களுக்கு பல்வேறு சிகிச்சைத் தீர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவிஸ் வாஸ்குலார் மையத்திலுள்ள எங்களது மருத்துவர்கள் முறையான நோயறிதல் மூலம் வழிகாட்டுவார்கள், மேலும் உங்களது தேவைகளின் அடிப்படையில் பொருத்தமான மற்றும் பயன்மிக்க சிகிச்சைத் திட்டத்தையும் வழங்குவார்கள். 

Varicose Veins Treatment in Chennai Coimbatore | Hyderabad | Tirupati | Rajahmundry Kolkata | Madurai | Bengaluru |Mysore Visakhapatnam | Vijayawada 

For Appointment Call

Tamilnadu: 7847045678

Telangana: 9989527715

Andhra Pradesh: 9989527715

Karnataka: 8088837000

Kolkata: 9154089451

Branches

Home
Services
Doctors
Branches
Blog