சுருள் சிரை (வெரிகோஸ் வெய்ன்ஸ்) உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் பாதிப்பு அல்ல; ஆனாலும், இதற்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் பல உடல்நல சிக்கல்கள் உருவாவதற்கு இது வழிவகுக்கும். சிகிச்சைக்கு முன்பு, ஆரம்ப நிலையிலேயே இதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் துல்லியமாக கண்டறிவது, மிகவும் முக்கியம். இருந்தாலும், சரியான நேரத்தில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையானது, இப்பாதிப்பிலிருந்து விரைவாக குணம்பெறுவதற்கு முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஏவிஸ் மருத்துவமனையில், நோயாளியின் உடல்நிலை குறித்த
தகவல்கள், நோயின் விரிவான விவரங்கள் மற்றும் மருத்துவ வரலாற்றை முழுவதுமாக தெரிந்துகொள்வதன் மூலம், சரியான மருத்துவ தீர்வை முன்வைப்பதில் இருந்து எமது சிகிச்சை நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குகிறோம். நாங்கள், எங்கள் அனைத்து நோயாளிகளையும், அவர்களின் தேவைகளையும் சரியாக புரிந்து கொள்வதுடன், எப்போதும் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
ஏவிஸ் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற, சிறப்பான பயிற்சியும் அனுபவமும் கொண்ட மருத்துவர்கள் வழியாக, நோயாளிகள் அனைவருக்கும் திருப்தியான, நம்பிக்கை அளிக்கும் சிகிச்சை வழங்கப்படுவதை நாங்கள் எப்போதும் உறுதிசெய்கிறோம்.

நாங்கள், மற்ற இரத்தநாள (வாஸ்குலர்) பிரச்சினைகளுக்கான சிகிச்சை மையங்களைவிட, சிறப்பான, பயனளிக்கும் சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோயாளிகள் குணமடைவதை ஏதுவாக்குகிறோம். மேலும், பின்வரும் காரணங்கள், “ஏவிஸ் மருத்துவமனை” இரத்தநாள
(வாஸ்குலர்) பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருப்பதை உறுதிப்படுத்தும்:

  1. எமது மருத்துவமனையின் மருத்துவர்களே உங்களுக்கான கலர் டாப்ளர் பரிசோதனையை மேற்கொள்கின்றனர்

டாப்ளர் அல்ட்ராசவுண்ட் சோதனை, ஒலி அலைகளைப் பயன்படுத்தி, நரம்புகள் மற்றும் தமனிகளில் இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சனைகள், உறைவுகள் அல்லது அடைப்புகள் போன்றவற்றை கண்டறிகிறது. இந்த பரிசோதனையானது, ஆழ்நாளக் குருதியடைப்பு (DVT) நோயறிதலில் இறுதியானது. மேலும், மருத்துவர்கள் இந்த டாப்ளர் பரிசோதனையை உங்களுக்கு மேற்கொள்வதில், எந்த தயக்கமும் கொள்வதில்லை.

2. வடுக்கள் இல்லாமல், தையல் இல்லாமல், மயக்க மருந்து
இல்லாமல், லேசர் அப்லேஷன் சிகிச்சைமுறையை எங்கள்
மருத்துவர்கள் சுருள் சிரை (வெரிகோஸ் வெய்ன்ஸ்) பிரச்சினைக்கு
தீர்வுகாண கையாளுகின்றனர்.

மருத்துவர் ராஜா வி. கோபல்லா தலைமையில் இயங்கும் அனுபவமிக்க மருத்துவர்கள் குழு, லேசர் சிகிச்சைகள் செய்வதில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். இதற்கான லேசர் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. நோயாளியின் தோலில் வெட்டவேண்டிய அவசியம் இதில் இல்லை. எனவே அதற்கு தையல் போடவும் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்கள் பற்றிய கவலையும் உங்களுக்கு அவசியமில்லை. இந்த சிகிச்சை முறையில் எந்த உடனடி பக்கவிளைவுகளும் இல்லை. லேசர் சிகிச்சை பெற்ற நோயாளிகள் ஒரே நாளில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்படுவார்கள்.

3. சுருள் சிரை (வெரிகோஸ் வெய்ன்ஸ்), குருதிநாள புண்களை
குணமாக்குதல் மற்றும் காயம் ஆற்றுவது ஆகிய அனைத்திற்கும்
எமது மருத்துவர்கள் முழுமையாக பொறுப்பு ஏற்றுக்கொள்வார்கள் ஏவிஸ் மருத்துவமனைக்கு, அதன் தகுதிவாய்ந்த மருத்துவர்கள்மீது மிகவும் நம்பிக்கை உள்ளது. சுருள் சிரை பாதிப்பு மற்றும் நாள்பட்ட சுருள் சிரை பாதிப்பால் உண்டான பாத சிரைப்புண் ஆகியவற்றை முழுமையாக குணப்படுத்துவதற்கான முழு பொறுப்பையும் எமது மருத்துவக்குழு

ஏற்கிறது. மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும் கொண்ட ஏவிஸ் மருத்துவமனை, இந்தியாவின் முன்னணி இரத்தநாள சிகிச்சை மையமாக செயலாற்றி வருகிறது. இத்தகைய சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்புடன் கூடிய மருத்துவ சேவையினால் நோய் பாதிப்புகளிலிருந்து முழுமையாக குணமடைந்து, மகிழ்ச்சியும், திருப்தியும்
கொண்டிருக்கிற, எண்ணற்ற வாடிக்கையாளர்களே, எங்களது உயர்தர மருத்துவ சிகிச்சைத்திறனை உறுதிசெய்கிற சாட்சிகளாகத் திகழ்கின்றனர்.

4. எமது சர்வதேச தகுதிகள் மற்றும் அங்கீகாரங்கள்

ஏவிஸ் மருத்துவமனையில் இரத்தநாளவியல் (வாஸ்குலர்) துறையை
வழிநடத்தும் மருத்துவர் ராஜா வி. கோபல்லா, வாஸ்குலர் மற்றும்
இன்டர்வென்ஷனல் ரேடியாலஜியில் உயர்பயிற்சி பெற்றவர் மற்றும் 24 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் கொண்டவர். யுஎஸ்ஏவின்
அட்லாண்டாவின் எமோரி யூனிவர்சிட்டி மருத்துவமனையின்
அங்கீகாரத்தையும் மற்றும் அமெரிக்கன் கல்லூரி ஆஃப் ஃப்லேபாலஜியின் யுனைட்டட் போர்டு சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார். இத்தனை கௌரவமிக்க தகுதிகளை கொண்டிருந்தபோதிலும் வெளிநாட்டில்
பணியாற்றுவதற்கு பதிலாக, அவர் தன் நாட்டுமக்களுக்கு உலகத்தரத்தில் மருத்துவ சேவையை வழங்க வேண்டுமென்ற உன்னதமான குறிக்கோளின் காரணமாக இந்தியாவிற்கு திரும்ப முடிவெடுத்தார்.

5. ஒரே ஆண்டில் 400 மேற்பட்ட இரத்தநாள (வாஸ்குலர்) பிரச்சினைகள் கொண்ட நோயாளிகளுக்கு டாக்டர். ராஜா வி. கோபல்லா சிகிச்சையளித்துள்ளார்

கடந்த சில ஆண்டுகளாக, ஏவிஸ் மருத்துவமனை, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 4000க்கும் மேற்பட்ட இரத்தநாள பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்திருக்கிறது. உயர்வான சிகிச்சை வெற்றி விகிதம், அதிகரித்துக்கொண்டே செல்லும் நோயாளிகளின் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அளவு ஆகியவற்றினால் ஏவிஸ் மருத்துவமனை, ஏற்கனவே இந்தியாவின் மிகவும் அபிமானமிக்க, சிறந்த இரத்தநாள சிகிச்சை மையமாக புகழ்பெற்றிருக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள ஏவிஸ் மருத்துவமனை, 50 படுக்கை
வசதிகளுடன்கூடிய, முதன்மையான, உலகத்தரத்திலான இரத்தநாள கதிர்வீச்சியல் மருத்துவமனை ஆகும். இதில் மிகச்சிறந்த நவீன மருத்துவ வசதிகளுடன், திறமையான மருத்துவர்களும் உள்ளனர். பகல் நேர சிகிச்சை சேவை மற்றும் குறுகிய நாட்கள் தங்கி அறுவைசிகிச்சை செய்துகொள்ளுதல் ஆகிய வெவ்வேறு வகையான சிகிச்சைகளுக்கு
ஏவிஸ் மருத்துவமனை, காப்பீட்டு வசதியை நோயாளிகளுக்கு
வழங்குவதற்காக அனைத்து முக்கிய காப்பீட்டு நிறுவனங்களுடன்
இணைந்துள்ளது. மேலும், இந்த மருத்துவமனை உலகம்
முழுவதிலுமிருந்து வருகிற, பன்னாட்டு நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கி வருகிறது.

மிக மேம்பட்ட, நவீன மருத்துவ சேவைகள் மற்றும் சர்வதேச
பயிற்சிபெற்ற மருத்துவர்களுடன், நேர்மையான சிகிச்சை மற்றும்
நேர்த்தியான பராமரிப்பு ஆகியவற்றில் உங்கள் எதிர்பார்ப்புகளை
பூர்த்திசெய்வதில் நாங்கள் எப்போதும் உறுதிபூண்டிருக்கிறோம். சுருள் சிரை (வெரிகோஸ் வெயின்ஸ்) பிரச்சினை உட்பட இரத்தநாளங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண இன்றே எங்களது மருத்துவரை சந்திக்க எங்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்யுங்கள்.